தமிழகத்திற்கு அல்வா.. புதுச்சேரிக்குத் துரோகம்: மத்திய பட்ஜெட்டை வறுத்தெடுத்த விசிக!

2 months ago 6
ARTICLE AD

விழுப்புரம்: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழகத்தைப் புறக்கணிக்கும் வகையிலும், நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணத் தவறியும் உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், குறிப்பாகத் தமிழகத்திற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மாநிலத்திற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தைப் புறக்கணிக்கும் வகையிலேயே ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கோ, வறுமையைப் போக்குவதற்கோ அல்லது பொருளாதார வீழ்ச்சியை மீட்பதற்கோ எந்தவொரு உருப்படியான திட்டமும் இதில் இல்லை. பட்ஜெட் அறிவிக்கப்பட்ட உடனேயே பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததே இதற்குச் சான்று.100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட வெறும் 7,000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது இது போதுமானதல்ல.

'இரட்டை எஞ்சின்' ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, வழக்கமான 10% உயர்வு கூட அளிக்கப்படாமல் 150 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில மருத்துவமனைகளுக்கு நிதி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி வஞ்சிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மையினர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு வெறும் காகித அளவிலேயே உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 70,000 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) மூடப்பட்டுள்ளன.

அவர்களுக்கு எந்தப் பாதுகாப்புத் திட்டமும் இல்லை.கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாகியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், முறைசார் துறையில் இதுவரை 2 கோடி பேருக்குக் கூட வேலை வழங்க முடியவில்லை.

பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் டெலிவரி பாய் (Gig Workers) வேலைக்குச் செல்லும் அவலம் தொடர்கிறது.16-வது நிதிக் குழுவின் அறிக்கையின்படி, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு 41% என்ற அளவிலேயே நீடிப்பது மாநிலங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் பாஜக அரசின் தோல்வியைப் பறைசாற்றுவதாகவும், தமிழகத்தைப் புறக்கணிப்பதாகவும் அமைந்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Entire Article