தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை...திருப்பதியில் த்ரிஷா சாமி தரிசனம்

1 month ago 5
ARTICLE AD

தமிழ்நாடு அரசியல் களத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடந்த ஒரு வார காலமாக ஆன்மிக வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி விஜயிந்த் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகிறது. அதிமுக 78 தொகுதிகளிலும் திமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகுத்து வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் திமுக, அதிமுகவின் வெற்றிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கட்சி தலைவர் விஜய் திருச்செந்தூர், ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று கடந்த சில தினங்களுக்கு முன் வழிபட்டார். இந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் விஜயின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணி முருகன் கோயிலில் வழிபட்டார்.

திருப்பதியில் த்ரிஷா வழிபாடு

அதேபோல் நடிகை த்ரிஷா இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். பின் கோயில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர், தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு ‘ரிசல்ட்டு பக்கா மனதே’ (இன்று ரிசல்ட் பக்காவா நம் பக்கம்தான்) என்று கூறி கத்தினார். த்ரிஷா புன்னகையை த்ரிஷா பதிலாக கொடுத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலில் வழிபட்டார்.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு 85.10% ஆக இருந்தது. இதனால் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் 62 மையங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் வாக்கு எண்ணும் மையங்களில் 10,545 ஊழியர்கள் பணியில்  அமர்த்தப்பட்டுள்ளனர்.

Read Entire Article