தமிழக கபடி வீரங்கணைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

கபடி போட்டி:

பல்கலைக்கழகங்களுக்கு இடையே 2024-25 ஆம் ஆண்டிற்கான மகளிர் கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து மகளிர் அணியினர் கபடி தொடரில் கலந்து கொள்வதற்காக பஞ்சாப் சென்றிருந்தனர்.

வீராங்கனைகள் மீது தாக்குதல்:

இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பங்கா பல்கலைக்கழகம் இடையே நடந்த போட்டியில் தமிழக வீரங்கனைகள் ஃபவுல் செய்யதாக சொல்லப்படுகிறது. இதனால் நடுவரிடம் முறையிட்ட போது அது வாக்குவாதமாக மாறி வீராங்கனைகளை நடுவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வீராங்கணைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.