தமாகாவிற்கு 5 தொகுதி... அத்தனையும் திமுக கோட்டை.!! தாக்குப்பிடிப்பாரா ஜி.கே.வாசன்.?

2 weeks ago 2
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 28 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்த பலமான கூட்டணியை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன் தினம் பாஜகவிற்கு 27 தொகுதி, பாமகவிற்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அடுத்தாக நேற்று ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது..

இதில் ஒட்டன்சத்திரம், கும்பகோணம்,ராணிப்பேட்டை, கிள்ளியூர்,ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டணி கட்சியான தாமரை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திமுக கோட்டையாக பார்க்கப்படும் இந்த தொகுதியின் வரலாற்றை தற்போது பார்க்கலாம். ஒட்டன்சத்திரம் என்பது திமுகவின் கோட்டை மட்டுமில்லாமல், அது தற்போது அமைச்சராக உள்ள சக்கரபானியின் கோட்டை என்றே கூறப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக சக்கரபாணியே அந்த தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த முறையும் திமுக சார்பாக சக்கரபாணியே போட்டியிடுகிறார். அவரை  எதிர்த்து திமுகவில் ஒருவர் கூட விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்ததாக ஈரோடு மேற்கு தொகுதி கடந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலில்  மூத்த அரசியல் வாதியான முத்துசாமி போட்டியிட்டு வென்றுள்ளார். இந்த முறையும் முத்துசாமியே போட்டியிடவுள்ளார். இந்த நிலையில் தான் தற்போது தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த யுவராஜ்க்கு  இந்த முறை ஈரோடு கிழக்கிற்கு பதிலாக ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

அடுத்தது திமுகவின் கோட்டையாக பார்க்கப்படும் தொகுதி கும்பகோணம், இந்த தொகுதியானது கடந்த 30 ஆண்டுகளாக திமுகவே தக்கவைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டு திமுக படு தோல்வி அடைந்து எதிர்க்கட்சியாக கூட வராத சமயத்திலும் கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன் வெற்றி பெற்றார். எனவே திமுகவின் பலம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றாக இருப்பது கும்பகோனம், அந்த தொகுதியில் களம் இறங்குகிறது தமாகா,

அடுத்த தொகுதி தான் ராணிப்பேட்டை, இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ராணிப்பேட்டை தொகுதியை தக்க வைத்துள்ளார் அமைச்சர் காந்தி, இஸ்லாமியர்கள் கனிசமாக இருக்கும் இந்த தொகுதியில் த.மா.கா தாமரை சின்னத்தில் நிற்கிறது. தமாகா அடுத்ததாக களம் இறங்கும் தொகுதி கிள்ளியூர்,  கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படவுள்ளது. எனவே தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த 5 தொகுதியும் ஜி.கே.வாசனுக்கு சவலாகாவே அமைந்துள்ளது.

Read Entire Article