தாரே ஜமிர் பர்

பாலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஆமிர் கான். 2007 ஆம் ஆண்டில், இவர் நடித்து இயக்கி வெளியான படம் தாரே ஜமீன் பர். டிஸ்லக்ஸியா எனப்படும் கற்றல் குறைப்பாடுடைய இஷான் எனும் குழந்தையை சுற்றி பயணிக்கப்படும் கதை இது. குழந்தைகளின் உலகத்தை மையமாக வைத்து இதுவரை வெளியான படங்களில் முக்கியமான ஒரு படமாக இந்த படம் கருதப்படுகிறது. இந்தி மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக இருக்கிறது

சிதாரே ஜமீர் பர்

திவி நிதி ஷர்மா எழுதி பிரசன்னா ஆர்.எஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக், அரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பென்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர், ஆயுஷ் பன்சாலி, டோலி அலுவாலியா, குர்பால் சிங், பிரிஜேந்திர கலா, பிரிஜேந்திர கலா இப்படத்தில் நடித்துள்ளார்கள். வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிககர்களை கவர்ந்துள்ளது.

சிதேரே ஜமீர் பர் டிரைலர் ரிவியு

முதல் பாகத்தில் ஓவிய ஆசிரியராக வந்த ஆமீர் கான் இந்த பாகத்தில் பாஸ்கெட் பால் பயிற்சியாளராக வருகிறார். குடிபழக்கத்தால் அடிக்கடி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் அவரை அறிவுசார் குறைபாடுள்ளவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சியளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த புதிய இடத்திற்கு சென்று அங்குள்ள மக்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு பாஸ்கெட் பால் பயிற்சி அளிப்பதே படத்தின் கதை.

செண்டிமெண்ட் , நகைச்சுவை என உருவாகியிருக்கும் இப்படம் அது சொல்ல வரும் மெசெஜையும் சரியாக கையண்டிருக்கிறது என்பதை இந்த டிரைலரில் பல காட்சிகள் உணர்த்துகின்றன. பைத்தியத்தை பைத்தியம் என்றுதான் சொல்ல முடியும் என்று ஒரு காட்சியில் ஆமிக் கான் சொல்ல அவரது அம்மா உடனே குள்ளனை குள்ளன் என்றுதான் சொல்ல முடியும் என்கிறார். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவருக்கான தனித்திறன் இருக்கிறது. இப்படி இருப்பது தான் நார்மல் என சமூகம் வரையறை செய்பதை மறுத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான நார்மல் என்பதே இந்த படம் சொல்ல வரும் முக்கிய கருத்தாக இருக்கிறது.