தனுஷ் கூட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டாங்க...பகீர் கிளப்பிய சீரியல் நடிகை மான்யா

3 weeks ago 3
ARTICLE AD

பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பேட்டி ஒன்றில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இந்த பேட்டியில் நடிகர் தனுஷூடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி தனக்கு தனுஷின் மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்துள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீரியல் நடிகை மான்யா பேட்டி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வானத்தைப் போல' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். இந்த தொடரில் அவர் நடித்த துளசி கதாபாத்திரம் பரவலாக கவனமீர்த்தது. தொடர்ந்து கயல், அன்னம் , மருமகள் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றில் மான்யா பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டியில் தான் சீரியலுக்கு நடிக்க வந்த பின்னணி குறித்து மான்யா பகிர்ந்துகொண்டார் . எந்த காரணத்திற்காகவும் கிளாமர் காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என தீர்மானமாக உள்ளதாக மான்யா ஆனந்த் கூறினார். மேலும் பேசிய அவர் தனுஷின் மேலாளரிடம் இருந்து தனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்யசொல்லி தனக்கு அழைப்பு வந்ததாக மான்யா தெரிவித்துள்ளார்.

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்ன தனுஷ் மேலாளர்

" சில மாதங்கள் முன்பு எனக்கு ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் தனுஷின் மேலாளர். தனுஷ் தயாரிக்கும் படத்தில் நீங்க நடிக்க முடியுமா என்று அந்த நபர் சொன்னார். அத்துடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று  சொன்னேன். தனுஷுடன் அட்ஜஸ்ட்மெண்ட் என்றாலும் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் போட்டார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதேபோல் சமீபத்தில் இன்னொருவர் திரைக்கதை அனுப்பி தனுஷ் படத்தில் நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அந்த நபரின் நம்பரை நான் தருகிறேன். நிறைய பேருக்கு அந்த பையன் இப்படி மெசேஜ் செய்கிறார்" என்று மான்யா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் 💯

Popular Serial Actress Manya Anand has boldly accused #Dhanush and his Manager #Shreyas Who Approched her for commitment(Adjustment) with dhanush 🤮 by the name of casting her in dhanush's film 🎥

What a Creature u r Dhanush 😡💔 pic.twitter.com/tAdMw06ag0
— Troll Unwanted Haters (@wanted_Hater67) November 17, 2025

Read Entire Article