தனுஷை சுட்டிக்காடி தவெகவை தாக்கிய கனிமொழி..அணல் பறந்த தாராபுரம் பிரச்சாரம்

1 month ago 4
ARTICLE AD

தாராபுரம் அரசியல் பிரச்சாரத்தின் போது தவெக அரசு அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படாததை விமர்சித்து பேசிய எம்.பி கனிமொழி தனுஷை உதாரணமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இரு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கெனவே அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். இரு தொகுதிகளிலும் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தனுஷை சுட்டிக்காட்டிய கனிமொழி

பிரச்சாரத்தில் பேசிய எம் பி  கனிமொழி "ஆறு சிலிண்டர் தருவோம் என்று சொன்னது இன்று மூன்று சிலிண்டராகிவிட்டதா. வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் வந்ததா. வேலையில்லா பட்டதாரியாக நடித்த தனுஷ் தான் வந்தார். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்றார். ஆனால் அதற்கு ஆயிரம் கண்டிஷன் போட்டு ஏமாற்றிவிட்டார்கள். முன்பு 200 ரூபாய் வந்த கரண்ட் பில் என்று 20 ஆயிரம் வருகிறது. கேட்டால் அரசிடம் பணம் இல்லை என்கிறீர்கள். ஆனால் இதே காமராஜர் அவர்களும் , பேரறிஞசர் அண்ணா அவர்களும் , நீங்கள் அடிக்கடி சொல்லும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களும் ,அம்மையார் ஜெயலலிதா , தலைவர் கலைஞர் அவர்களும்  இருந்த அலுவலகத்தை மாற்றி இன்று  7 கோடி செலவு செய்கிறீர்கள் . உங்கள் ஜோசியக்காரர் என்கிறார் என்று டெண்டர் கூட விடாமல் 7 கோடி செலவு செய்கிறீர்கள். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? என எம் பி கனிமொழி பேசினார்

Read Entire Article