தனிமையில் உல்லாசம்! வேறொரு பெண்ணுடன் பழகிய கள்ளக்காதலன்! ஆண் நண்பரை தீர்த்து கட்டிய பெண்!

2 months ago 5
ARTICLE AD

"காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண் நண்பரை கத்தியால் குத்திய பெண் கைது, செய்து சிறையில் அடைத்தனர்"

அசாம் மாநிலம் சீல்பேரி பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் சைத் (31). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

தனிமையில் அவ்வப்போது உல்லாசம்

இவருக்கும் அசாம் மாநிலம் குவாதி பகுதியைச் சேர்ந்த பரிதாபேகம் (31) என்கிற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக ஆரம்பித்த இவர்களுடைய பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்தும், ஸ்ரீபெரும்புதூரில் லாட்ஜ் எடுத்து உருவம் எடுத்தும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

வேறொரு பெண்ணுடன் தொடர்பு

ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் இம்ரான் சைத் வேறொரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பரிதாபேகம் கண்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நிலவி வந்துள்ளது.

காதலர்களுக்கு இடையே தகராறு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இம்ரான் சைத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் பரிதாபேகம் கேள்வி எழுப்பவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பரிதாபேகம் இம்ரான் சைத்தை காய்கறி நறுக்கும் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒரகடம் போலீசார் பரிதாபேகத்தை கைது செய்து விசாரித்ததில் பரிதாபேகத்துக்கு ஏற்கனவே, திருமணம் நடந்து கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து, பரிதாபேகத்தை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வடமாநில பெண் ஒருவர், கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article