"தண்ணீய கலந்தடி" மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

8 months ago 9
ARTICLE AD

மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர் மதுபானம் வாங்கி கொடுப்போது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டிய ஆசிரியரே இப்படி செய்யலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்:

மத்தியப் பிரதேசம் மாநிலம் கட்னி மாவட்டத்தில் கிர்ஹானி கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் லால் நவீன் பிரதாப் சிங். அரசு பள்ளி மாணவர்களுக்கு இவர் மதுபானம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர், மாணவர்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு, மாவட்ட ஆட்சியர் திலீப் குமார் யாதவ், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரி ஓ.பி. சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதலில் அந்த ஆசிரியர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

வெளியான பரபர வீடியோ:

இந்த காணொளி பல்வேறு அதிகாரிகளுக்கு பரப்பப்பட்டது. பின்னர், அந்த ஆசிரியர் லால் நவீன் பிரதாப் சிங் என அடையாளம் காணப்பட்டார். தவறான நடத்தை, குழந்தைகளை மது அருந்த ஊக்குவித்தல், ஆசிரியரின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், மத்தியப் பிரதேச சிவில் சர்வீசஸ் (நடத்தை) விதிகளின் கீழ் ஆசிரியர் சிங் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்" என்றார்.

#MP #Offbeat

मध्य प्रदेश के कटनी में प्राइमरी स्कूल शिक्षक, लाल नवीन प्रताप सिंह ने 4-5 नाबालिक छात्रों को शराब पिलाई।

घटना का वीडियो सामने आने के बाद जिला शिक्षा अधिकारी ने शिक्षक को निलंबित कर दिया। pic.twitter.com/nAxCbadwQ8
— काश/if Kakvi (@KashifKakvi) April 19, 2025

வைரலாகும் வீடியோவில், ஒரு நபர் ஒரு அறையில் சிறுவர்களுக்கு கோப்பைகளில் மதுபானம் வழங்குவதைக் காணலாம். மாணவர்களில் ஒருவரிடம் மதுபானத்தை அருந்துவதற்கு முன்பு தண்ணீரை கலக்கச் சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: India Vs China: நீ ஒண்ணும் அவ்ளோ நல்லவன் இல்லையே.? இந்தியாவிற்கு உதவ தயார் என சீனா அறிவிப்பு... எதற்கு.?

Read Entire Article