தடுப்பில்லா பாலம்... தினமும் உயிரோடு போராடும் பயணம்! தஞ்சாவூர் அருகே அவலம்

1 week ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கல்விராயன்பேட்டையில் ஒடும் சக்கரா பாசன வாய்க்காலில் தடுப்புச் சுவர் இல்லாத பாலத்தால் இரவு நேரத்தில்  வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே கல்விராயன்பேட்டை பகுதியில் ஓடும் சக்கரா பாசன வடிகால் வாய்க்கால் மூலம் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சாகுபடி நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்த பாசன வாய்க்கால் பாலத்தில் எவ்வித தடுப்புச் சுவரும் இல்லாததால், இரவு நேரங்களில் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதேனும் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டை பகுதி சாலை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்தச் சாலையின் குறுக்கே செல்லும் சக்கரா பாசன வடிகால் வாய்க்காலின் மேல் கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்தின் இருபுறங்களிலும் எவ்வித பக்கவாட்டுத் தடுப்புச் சுவர் இல்லை. மேலும் எவ்வித எச்சரிக்கை பலகைகளோ இல்லை.

பகல் நேரங்களில் சாலையின் நிலை தெரிந்தவர்கள் ஓரளவு கவனமாகச் சென்றாலும், இரவு நேரங்களில் இந்த வழியே வரும் வெளியூர் வாகன ஓட்டுனர்கள் நிலைமை மிக மோசமாக உள்ளது. இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், இரவு நேரத்தில் பாலம் இருக்கும் இடமே தெரிவதில்லை.

எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கின்  வெளிச்சம் கண்ணை மறைக்கும் போது, நிலைதடுமாறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நேரடியாக வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்தான சூழல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "இந்த வாய்க்கால் பாலம் நீண்ட நாட்களாகவே தடுப்புச் சுவர் இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் இந்தச் சாலையில் செல்வதற்கே அச்சமாக இருக்கிறது. ஏதேனும் பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகப் பாலத்தை ஆய்வு செய்து,  வலுவான தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும். மேலும் இந்த வடிகால் பாலம் சாலையின் வளைவு பகுதியில் உள்ளதால் எச்சரிக்கை பலகைகளும் அமைக்க வேண்டும் என்றனர்.

பகலில் பார்த்தால் பள்ளமாக தெரியும் இந்த இடம், இரவில் பார்த்தால் மரண வலையாக மாறிவிடும் நிலையில் உள்ளது. சக்கரா பாசன வாய்க்காலில் தடுப்புச் சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடன் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி ஓடும் சமயங்களில் அபாயம் மேலும் அதிகரிக்கும் என்றும், சிறிய கவனக்குறைவு கூட பெரும் விபத்தாக மாறக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்த குறுகிய பாலத்தை அகலப்படுத்தி, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காலம் தாழ்த்தாமல் பெரும் விபத்துக்கள் நடப்பதற்கு முன்பாகவே இந்த பாசன வாய்க்காலில் தடுப்புச்சுவர் கட்டப்பட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Read Entire Article