தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வாளமர்க்கோட்டை அறுவடை முடிந்த வயல்வெளிப் பகுதிகள் இரை தேடும் கொக்குகள், நத்தை கொத்தி பறவை என நூற்றுக்கணக்கான பறவைகளால் மினி வேடந்தாங்கல் போல் காட்சி அளிக்கிறது.

தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை பகுதியில் உள்ள வயல்கள் தற்போது மினி பறவைகள் சரணாலயமாக மாறிவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. உணவு தேடி காலை வேளையில் வாகனங்களின் வி சத்தத்திலும் அசராமல் உலா வரும் நத்தை கொத்திகள், கொக்குகளை காண கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இப்பகுதியில் விவசாயிகள் சம்பா சாகுபடி முடித்து அறுவடை பணிகளை மேற்கொண்டு உள்ளனர். அறுவடை முடிந்த வயல்களில் கொக்குகள், நத்தைக் கொத்திகளை அதிக அளவில் இரை தேடி வருகின்றன. நூற்றுக்கணக்கில் காணப்படும் இந்தப் பறவைகளால் அப்பகுதி மினி வேடந்தாங்கல் போல் காணப்படுகிறது. முடிகிறது.

சாதாரணமாக நத்தைக் கொத்திகள், கொக்கு, நாரைகள் உட்பட பறவைகள் மக்கள் நடமாட்டம் இருந்தால் கூட்டமாக பறந்து விடுவது இயல்பான ஒன்று. ஆனால் வயல்களில் ஆயிரக்கணக்கான பறவைகளை காண முடிகிறது. ,கூட்டமாக வயல்களில் சிதறி கிடக்கும் நெல்மணிகள் புழு, பூச்சிகளை பிடித்து உணவாக்கி கொள்கின்றன. சாலைகளில் வாகன சட்டம் அதிக அளவில் இருந்தாலும் எவ்வித சலனமும் காட்டாமல் அமைதியாக உணவு தேடி வயல்களில் உலா வருகின்றன.

விவசாயிகளும் பறவையினங்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல், துரத்தி அடிக்காமல் அறுவடை பணிகளில் மும்முரம் காட்டுகின்றனர். உணவைத் தேடி ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு ஜிவ்...என்று எழுந்து பறக்கும் கொக்குகள், நத்தைக் கொத்திகள் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள், பொதுமக்களுக்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.

இப்படி கூட்டம் கூட்டமாக வயல்வெளிகளில் திரியும் பறவையினங்களை பார்க்கும் போது இப்பகுதி மினி பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது.