தஞ்சையில் முட்டை விலை அதிரடி குறைவு! ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி

1 month ago 6
ARTICLE AD

தஞ்சாவூர்: கிராமங்களில் ஒரு பழமொழி கூறுவார்கள்... தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். அதுபோல் ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலியின் காரணமாக தஞ்சையில் முட்டை விலை குறைந்து ரூ.5க்கு விற்பனையாகிறது. என்ன காரணம் என்கிறீர்களா?

தஞ்சைக்கு நாமக்கல், கந்தர்வக்கோட்டை மற்றும் திருச்சியில் உள்ள பண்ணைகளில் இருந்து தினமும் முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக தஞ்சைக்கு ஒரு நாளைக்கு 6 லட்சம் வரையிலான முட்டைகள் விற்பனைக்கு லாரிகளில் கொண்டு வரப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய முட்டைகளின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி வரையிலான முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொள்முதல் விலை 530 காசுகளாக இருந்தது.

இதையடுத்து அண்மையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தின் முடிவுபடி முட்டை கொள்முதல் விலையை படிபடியாக குறைக்க தொடங்கினர். இதனால் அதன் கொள்முதல் விலை தற்போது 380 காசுகளாக குறைந்துள்ளது. இதனால் தஞ்சையில் முட்டை விலை குறைந்து மொத்த கடைகளில் ஒரு முட்டை ரூ.4.50-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ஒரு முட்டை கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.7வரை விற்கப்பட்டது. தற்போது கொள்முதல் விலை குறைவால் ரூ.5க்கு விற்கப்படுகிறது. இதேபோல் முட்டை மொத்த விற்பனை கடைகளில் ஒரு முட்டை ரூ.4.30 என நிர்ணயித்து, 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.129க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து தஞ்சையை சேர்ந்த முட்டை மொத்த வியாபாரிகள் தரப்பில் கூறுகையில்,  கடந்த சில நாட்களாகவே முட்டை கொள்முதல் விலை குறைந்த வண்ணம் உள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய கோடிக்கணக்கான முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் தேக்கமடைந்துள்ளது. பறவை காய்ச்சல் பீதியின் காரணமாகவும் முட்டை விலை குறைந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டிய முட்டைகள் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வான்வழி மற்றும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் 6 கோடி வரையிலான முட்டைகளை ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. போர் சூழல் தொடர்ந்து நீடித்தால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முட்டை ஒரு சிறந்த உணவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு முட்டையின் எடையில் சுமார் 60 சதவீதம் வெள்ளை கருவும், 30 சதவீதம் மஞ்சள் கருவும் உள்ளன. வெள்ளை கருவில் 90 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 சதவீதம் புரதம் உள்ளது. இதில் கொழுப்பு சுத்தமாக இல்லை. கார்போஹைட்ரேட் சத்தும் குறைவு.

மஞ்சள் கருவில் 100 சதவீதம் கொழுப்பு உள்ளது. இதன் மஞ்சள் நிறம் குறிப்பிட்ட பறவை இனம் சாப்பிட்ட உணவில் உள்ள 'கரோட்டினாய்டு', 'ஸாந்தோபில்' எனும் மஞ்சள் நிறமிகளின் அளவை பொறுத்து உருவாகிறது. உதாரணமாக மஞ்சள் நிற மக்காச்சோளத்தை தின்று வளரும் பறவையின் முட்டை, அதிக அடர்த்தியுடன் கூடிய மஞ்சள் கருவைப் பெற்றிருக்கும். மஞ்சள் கருவில் உள்ள நிறமிகளில் 'லூட்டின்' எனும் நிறமிதான் அதிகம். 100 கிராம் கோழி முட்டையில் தண்ணீர் 75 கிராம், கார்போஹைட்ரேட் 1.12 கிராம், கொழுப்பு 10.6 கிராம், கொலஸ்ட்ரால் 373 மி.கிராம், புரதச்சத்து 12.6 கிராம் வைட்டமின்- ஏ, வைட்டமின்-டி உள்ளிட்ட பத்து வகை வைட்டமின்கள், கால்சியம், இரும்பு உள்ளிட்ட 7 வகை தாதுச்சத்துகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் என பல சத்துகள் உள்ளன. ஒரு முட்டை சாப்பிட்டால் 155 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. ஒரு நேரத்தில் இரண்டு முட்டை சாப்பிட்டால் ஒரு சராசரி மனிதருக்கு காலை உணவுக்கு தேவையான சக்தி கிடைத்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Entire Article