தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று நீட் தேர்வு 12 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 5,165 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நாடெங்கிலும் நடைபெறவுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 மையங்களில் இந்த தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூர் கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 360 மாணவர்களும், அரசர் மேல்நிலைப் பள்ளியில் 456 மாணவர்களும், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அரண்மனை வளாகம்) 360 மாணவர்களும், தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 360 மாணவர்களும், தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவர்களும், செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவர்களும் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 269 மாணவர்களும், மன்னர் சரபோஜி கல்லூரியில் (ஏ-சென்டர்) 480 மாணவர்களும், பி.சென்டர் 480 மாணவர்களும், நிப்டம் கல்லூரியில் 480 மாணவர்களும், கேந்திரிய வித்யாலயாவில் 360 மாணவர்களும், வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவர்களும் என மொத்தம் 5,165 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுத உள்ள மையங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.