தஞ்சை மாவட்ட மக்களே உங்கள் கவனத்திற்கு... 19, 20ம் தேதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

6 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்க உள்ளது. உங்கள் பகுதி இருந்தால் தவறவிடாமல் பயன் பெறுங்கள். நாளையும், நாளை மறுநாளும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, கும்பகோணம் வட்டாரத்தில் நடக்கிறது.

அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புறங்களிலும், ஊராட்சிப்பகுதிகளிலும்  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மக்களுடன் முதல்வர் திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆதிதிராவிடர் குடியிருப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் திட்டத்தை செயல்படுத்தவும் அரசாணை மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த 29.01.2025 அன்று  முதலமைச்சர் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் 29.01.2025 அன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், 06.02.2025 அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளிலும், 12.02.2025 அன்று தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 07.03.2025 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் நடந்தது.

இதேபோல் 11.03.2025 அன்று திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 16.05.2025 அன்று திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும், 31.05.2025 அன்று பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 05.06.2025 அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளிலும் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது வரும் 20.06.2025 அன்று பாபநாசம் (ம) கும்பகோணம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் உரிய கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாபநாசம் (ம) கும்பகோணம் வட்டாரங்களில் வரும் 20.06.2025 அன்று சருக்கை தென்சருக்கை சமுதாயக்கூடத்திலும், உம்பளபாடி காவேரி (மேட்டுத்தெரு) அரசலாறு தலைப்பு (நீர்வளத்துறை) வளாகத்திலும், கோவிந்தநாட்டுச்சேரி புத்தூர் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்திலும், ரெகுநாதபுரம் ஸ்ரீசன் மஹாலிலும், திருவலஞ்சுழி வெண்ணிலா திருமண மண்டபத்திலும், திருநல்லூர் மகாலெட்சுமி திருமண மண்டபத்திலும், உத்தமதானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திப்பிராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், உள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வலையப்பேட்டை சமுதாயகூடத்திலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

பேராவூரணி வட்டாரத்தில் நாளை 19.06.2025 அன்று பாலத்தளி குரூப் எண்ணானிவயல் நெல்கொள்முதல் நிலையத்திலும், பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், களத்தூர் அய்யனார் கோவிலிலும், பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணம் சமுதாயக்கூடத்திலும். அம்மையாண்டி ஊராட்சி ஏனாதிகரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு D.G.L திருமண மஹாலிலும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன.

மேற்கண்ட முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட சேவைகளுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் முகாம் நடைபெறும் இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கியும். களப்பணியாளர்கள் துறையின் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்து, தேவையான சேவைகளுக்கேற்ப ஆவணங்கள் குறித்தும் தெளிவுரைகள் பெற்று முன்னரே பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று முகாம் நாளன்று அம்மனுக்களை இணையவழியில் பதிவு செய்து தீர்வு காணப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விபரங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, மேற்கண்ட ஊராட்சிப்பகுதிகளில் 19.06.2025 மற்றும் 20.06.2025 அன்று காலை 10 மணி முதல் நடைபெறவிருக்கும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும். இத்தகவலலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Read Entire Article