தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி புகார்கள்: கவுன்சிலர்களின் தொடர் கேள்விகள்

4 weeks ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தலைமையில் நடந்தது. ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

மேத்தா: அய்யங்குளத்தை தூர்வார வேண்டும் என கடந்த ஆறு மாதங்களாக கூறி வருகிறேன் . ஆனால் ஃபைல் காணவில்லை என கூறுகின்றனர். மேலும் அங்கு விளக்குகள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அங்கு செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: ஒரு வாரத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரம்யா சரவணன்: ஸ்டெம்பார்க்கை உடன் சீரமைக்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து உடன் சரி செய்ய வேண்டும்.

வெங்கடேசன்: மாநகராட்சி கூட்ட அரங்கில் தலைவர்கள் படம் வைக்க வேண்டும். பணிகள் முடிந்த இடத்தில் கல்வெட்டுகள் வைக்க வேண்டும் என பலமுறை தெரிவித்து வருகிறேன். இருப்பினும் நடவடிக்கை இல்லை. விக்டோரியா காலனியில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. மாநகராட்சியின் பழைய கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். பள்ளிக்கூடங்களையும் சீரமைக்க வேண்டும்.

மேயர்: அடுத்த கூட்டத்திற்குள் தலைவர்கள் படங்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வெட்டு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளையும் சீரமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

வெங்கடேசன்: மாநகராட்சி வணிக வளாகங்களில் கடை வைத்து நடத்துபவர்கள் செய்யும் விதிமுறை மீறல்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமிட்டி போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை நம்ப முடியாது.

ஆனந்த்: கவுன்சிலர் அதிகாரிகளை நம்ப முடியாது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? அதிகாரிகள் ஒத்துழைப்பு இருந்தால் தான் பணிகள் நடக்கும்.

ஜெய்சதீஷ்: 31வது வார்டில் மேன்ஹோல் ஒன்றுதான் மாற்றம் செய்துள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது என தெரிவித்து இருந்தோம். இதற்காக வந்து குழாய்களை சரி செய்தனர். தற்பொழுது தண்ணீர் துர்நாற்றத்துடன் வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவல் இருக்கும் நிலையில் சாக்கடை நீர் தேங்கி இருப்பதை சரி செய்ய வேண்டும். மாநகராட்சி சுவர்களில் ஓவியம் வரையப்படுகிறது. இதில் தனியார் விளம்பரம் பெரியதாக உள்ளது. இதனால் வருவாய் இழப்பு ஏற்படும். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு உள்ளதா என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

மேயர் ( பொ ) அஞ்சுகம் பூபதி: மேன்ஹோல் குறித்து கணக்கெடுத்து சீரமைக்கப்படும். சுவர் ஓவியங்கள் வரையப்படும் பகுதிகளில் தனியார் விளம்பரங்கள் சிறிதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு இருக்கக் கூடாது என்பதுதான் நமது நோக்கம்.

சுகந்தா: எங்கள் வார்டில் தார்சாலை, சிமெண்ட் சாலை அமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்சதீஷ்: வளரும் நகரங்களில் பஸ் ஸ்டாண்ட் பெரியதாக அமைக்கப்படும். வணிக வளாகம் சிறியதாக இருக்கும். அதே போல் நம் மாநகராட்சியிலும் செய்ய வேண்டும். ஆம்னி பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

செந்தமிழ்ச்செல்வன்: 1வது வார்டு பள்ளி அக்ரஹாரம் நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகள் சரியாக நடக்கவில்லை. மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கொடிமரத்து மூளை பகுதியில் பாலம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

ஷெரீப்: எனது வார்டில் பாதாள சாக்கடை பம்பிங் ஸ்டேஷன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும். நீண்டகாலமாக பணிகள் நடப்பதால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனது வார்டு ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி பகுதியில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு இன்னும் இணைப்பு வழங்கப்படவில்லை.

லெனின்: ராஜீவ் நகர் பகுதியில் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆனபோதும் குடிநீர் தொட்டி செயல்பாட்டுக்கே வரவில்லை. வணிக நிறுவனங்களில் குப்பை மூன்று நாட்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இதனால் கடைக்காரர்கள் சாலைகளில் குப்பைகளை வைப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழ்வாணன்: எனது வார் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  பழைய பேருந்து நிலையத்தில் மிகவும் பழமையான யூனியன் கிளப் கட்டிடம் உள்ளது. இதனை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும். திருவள்ளுவர் வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பிரச்சனை குறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சி இடத்தில் ஷெட் போட்டுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பெரிய நிறுவனங்கள் என்பதற்காக நடவடிக்கை எடுக்க தயக்கமா?

உஷா: 39வது வார்டில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குப்பைகள் பிரச்சினையும் உள்ளது. 12ம் தெருவில் மேன்ஹோல் சரியில்லாததால் பிரச்சினை ஏற்படுகிறது. இதனை உடன் சீரமைக்க வேண்டும்.

நீலகண்டன்: குப்பைகள் குறித்த பிரச்சனை அதிகம் உள்ளது. மாநகராட்சிக்கு அருகில் உள்ள பஞ்சாயத்து குப்பைகள் நம் எல்லையில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாயத்து செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி குப்பைகளை மாநகராட்சி எல்லையில் கொட்டக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

செந்தில்: ஆதிதிராவிடர் மயானத்தில் கட்டப்பட்டுள்ள காத்திருப்பு கூடத்தை உடன் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

காந்திமதி: சரபோஜி மார்க்கெட் பகுதியில் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறவில்லை. மாநகராட்சியில் பணிகள் மேற்கொள்வதற்கு முன்பாக அந்தப் பணிகள் குறித்து கவுன்சிலர்களிடம் கருத்து கேளுங்கள். புதிய மீன் மார்க்கெட் பணிகள் வெகு தாமதமாக நடந்து வருகிறது. பணிகளும் தரமற்றதாக நடக்கிறது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து தற்காலிக மீன் மார்க்கெட்டை அங்கு மாற்ற வேண்டும்.

அக்ரம்: மழைக்காலம் ஆரம்பம் ஆக உள்ளது. மழைக்காலத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதா? வடக்கு வீதி சாக்கடை பிரச்சினை அப்படியேதான் உள்ளது. நான்கு வீதியில் உள்ள சந்துகளில் பேவர்பிளாக் பழுதடைந்துள்ளது. சரபோஜி, காமராஜ் மார்க்கெட்டில் கடை எடுத்துள்ள வணிகர்களுக்கு வாடகை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆணையர்: பத்து சதவீதம் வாடகை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகண்டன்: மாநகராட்சி கடைகளை வாடகை எடுத்தவர்களுக்கு ஒப்பந்த பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா? எனது வார்டு பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்.

அண்ணா பிரகாஷ்: மார்க்கெட் பகுதியில் 140 கடைகள் பூட்டியே கிடக்கிறது. இதில் தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் குடிநீர் வரும் என்று கூறினீர்கள். ஆனால் அவ்வாறு குடிநீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பவர் சப்ளையால் பிரச்சனை என்று இத்தனை வருடங்களாக கூறப்படுகிறது. இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலைவாணி: 42 வது வார்டு பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது தரமற்று செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உடன் இது குறித்து ஆய்வு செய்து பணிகளை தரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த்: சாலைகளில் வைக்கப்படும் பேனர், பிளக்ஸ் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறதா. பிளக்ஸ் வைக்க அனுமதி வழங்கப்படுகிறதா? போலீஸாரிடம் அனுமதி கடிதம் வாங்க வேண்டும் என கூறப்படுகிறது. இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறதா? இதற்கான விதிமுறைகள் என்ன? மீன் மார்க்கெட் பணிகள் எப்பொழுது நிறைவடையும். தற்காலிக மீன் மார்க்கெட் எப்போது மாற்றப்படும்.

மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி: பிளக்ஸ் வைக்க விதிமுறைகள் உள்ளது. இது குறித்து மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணுக்கினியாள்: எனது வார்டில் பூக்கார 3வது தெரு பழுதடைந்துள்ளது.  மாதாகோவில் தெரு, பள்ளத்து தெரு, இருதயபுரம் தெருக்களில் சாலைகள் அமைக்க அனுமதி கிடைத்த நிலையில் பணிகள் தொடங்கப்படவில்லை. என்ன காரணம்?  அனைத்தும் மிகச் சிறிய அளவிலான சாலைகள் தான். இதனை உடன் அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக உள்ளது. குப்பைகள் காலையில் சரியான நேரத்தில் எடுக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் குப்பைகளை சாலையில் வீசி எறிகின்றனர். எனவே தூய்மை பணியாளர்கள் காலையிலேயே குப்பைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். மதுரை மாநகராட்சிக்கு பாதாள சாக்கடைப்பணிகளுக்காக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்தது போல் தஞ்சாவூர் மாநகராட்சி பாதாள சாக்கடை பிரச்சினைகளை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.

மேயர் (பொ)அஞ்சுகம் பூபதி: தூய்மை பணியாளர்கள் காலையில் குப்பைகளை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை வண்டிகள் வருவதை தெரிவிக்கும் வகையில் பாடல் ஒலிக்கப்படும். மேலும் மணியோசை எழுப்பி குப்பை வண்டிகள் வருவது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Read Entire Article