தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம்... தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

7 months ago 11
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில் சித்திரை தேரோட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேருக்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மார்ச் 3ம் தேதி நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா கடந்த 24ம் தேதி காலை நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோயிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள்.

அங்கு தியாகராஜர்- கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி ஆகிய 4 வீதிகளில் தேர் வலம் வரும். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள தேர்நிலையில் இன்று காலை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி போன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவங்கினர். தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடியாகும். ஆனால்,  தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக காணப்படும். இதை போல், தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையாக இருக்கும் என கோயில் பணியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Read Entire Article