தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ விபத்து; கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மீட்பு

7 months ago 5
ARTICLE AD
<p>தஞ்சாவூர் அரசு இராச மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நடைபெறும் இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் உள்ளே சிக்கிருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து,&nbsp;சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வருகை தந்தனர</p> <p>தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்ததால், தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு சிகிச்சை பெற்றுள்ள 50 கர்ப்பிணி பெண்கள் பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p>தீ விபத்து செய்தியை அறிந்ததும், உறவினர்கள் திரண்டதால் மருத்துவமனையில் காவலாளிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p>
Read Entire Article