தஞ்சாவூர்; தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு விழா நடந்தது. இந்த ரயில் பெட்டி உணவகத்தை திருச்சி கோட்ட மேலாளர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகத்தை, கோட்ட ரயில்வே மேலாளர் திறந்து வைத்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையத்தின் முகப்பில், ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி திறந்து வைத்தார். இதில் முதன்மை வணிக மேலாளர் ரதி பிரியா மற்றும் ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் திருச்சி கோட்ட மேலாளர் பேசியது: திருச்சி கோட்டத்தில் இது இரண்டாவது ரயில் பெட்டி உணவகமாகும்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டு அதனை தனியாருக்கு 5 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டியின் உட்புறத்தில் குளிரூட்டப்பட்ட வசதியும், நவீன இருக்கைகளும், அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்வே துறைக்கு கணிசமான வருவாயை ஈட்டும். திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இதுபோன்று ரயில் பெட்டி உணவகங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும், விழுப்புரம் மற்றும் திருச்சி கோட்டை போன்ற முக்கிய நிலையங்களில் இதேபோன்ற பெட்டி உணவக ஒப்பந்தங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன என்றார்.

இந்த ரயில் பெட்டி உணவகம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக இது அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.