தஞ்சாவூர் மாவட்டத்தில் கத்திரி வெயிலை அடக்கிய “மழை” அரசி

7 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரத்தின் வெப்பத் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்றி உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணத்தில் பகுதியில் 45 மி. மீ. மழை பதிவாகியுள்ளது.

கத்தரி வெயில் தாக்கம் குறைந்தது

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். காலை தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது. சாலைகளில் கானல் நீர் பரவலாக தென்பட்டது. ஆனால் தற்போது கடந்த இரண்டு தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, ஒரத்தநாடு, வல்லம், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபவாசத்திரம், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சாலியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதன்படி திருவையாறில் 8, திருக்காட்டுப்பள்ளியில் 1.60, ஒரத்தநாட்டில் 8, வெட்டிக்காட்டில் 8.40, கும்பகோணத்தில் 45, நெய்வாசல் தென்பதி 24.80, பாபநாசத்தில் 10.40, அய்யம்பேட்டையில் 20, திருவிடைமருதூரில் 3.40, மஞ்சளாறு பகுதியில் 10.40, கீழ் அணைக்கரையில் 17.20, பட்டுக்கோட்டையில் 10, அதிராம்பட்டினத்தில் 12.90, ஈச்சன் விடுதியில் 3, மதுக்கூரில் 11.80, பேராவூரணியில் 3.60 என மொத்தமாக மாவட்டம் முழுவதும் 199.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தஞ்சை மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.48 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என தஞ்சை மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக அக்னி வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது. அதேபோல் இன்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது பெய்து வரும் மழை குறுவை சாகுபடிக்கு வயலை தயார் செய்ய பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பாபநாசம் விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதிஅக்ரஹாரம், பட்டுக்குடி, மணலூர் இலுப்பக்கோரை, மாகாளிபுரம், தேவன்குடி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சுமார் 100-ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று   சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால்  சாகுபடி செய்திருந்த தாருடன் கூடிய சுமார் 10- ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதும் சூறைக்காற்றினால் கீழே சாய்ந்து விழுந்து பாதிப்புக்குள்ளானது. இதனால் வாழை காய்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்ய வேண்டிய வாழைத்தார்களும் கீழே விழுந்து சேதமாகின

இதனால் முற்றிலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கீழே சாய்ந்து கிடக்கும் வாழை மரங்கள் மற்றும் வாழைத்தார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article