தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள்: 3 பேர் கைது

5 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆச்சாம்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த ரவுடியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக 2 பேரை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஆச்சாம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மகன் வேலு(35). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை வேலு குடித்து வந்து ஆச்சாம்பட்டி கடை தெரு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொது மக்களிடம் தகராறு செய்து வம்புக்கு இழுத்துள்ளார். பலர் கண்டித்தும் மீண்டும் மீண்டும் வேலு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த வேலு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் வேலுவை அவரது குடும்பத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வேலுவின் தாய் ராஜாமணி செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் கிராம மக்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மறுநாள் 12ம் தேதி மாலை வேலு இறந்தார். இதையடுத்து செங்கிப்பட்டி போலீசார் தாக்குதல் வழக்கை கொலை வழக்காக மாற்றி ஆச்சாம்பட்டியை சேர்ந்த க முனி அய்யா (55), க. கோவிந்தராஜ் (45) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு கொலை சம்பவம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே உள்ள நாயக்கர் பேட்டை கிராமம் பாரதி நகர் பகுதியில் வசிப்பவர் சம்பத்குமார்(58). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி லலிதா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.

மனைவி லலிதா கருப்பூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்று விட்டார். வீட்டில் சம்பத்குமார் மற்றும் அவரது மகன் பூவரசன் (23) ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான அருகே அமைந்துள்ள தனித்தனி வீடுகளில் உறங்கியதாக கூறப்படுகிறது. இவர்களது உறவினரான அதே ஊரில் வசிக்கும் சரவணன்(25) என்பவர், பூவரசன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தன்னுடன் பேசவில்லை என்ற முன் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு குடிபோதையில் அதிகாலை சம்பத்குமார் வீட்டிற்கு வந்து உறங்கிக் கொண்டிருந்த பூவரசனிடம் தகராறு செய்துள்ளார்.

அப்பொழுது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் பூவரசனை அடித்துள்ளார். காயம் அடைந்த பூவரசன் தப்பி ஓட அதை தடுக்க வந்த தந்தை சம்பத்குமாரை மண்வெட்டியால் தலையில் அடித்துள்ளார். அதனை தொடர்ந்து கீழே கிடந்த இரும்பு பைப்பால் மண்டையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே சம்பத்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கபிஸ்தலம் காவல்துறையினர் இறந்த சம்பத்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தலையில் காயம் அடைந்த பூவரசன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குசரவணனை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article