தஞ்சாவூரில் பாட்டாளி வர்க்க தலைவர் லெனின் நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

2 months ago 6
ARTICLE AD

தஞ்சாவூர்: உலக நாடுகளை மிரட்டும், ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை முறியடிப்போம் என்று இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் 101 வது நினைவு நாளில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மக்களை ஒட்டச் சுரண்டும், நாடுகளின் இயற்கை கனிம வளங்களை கொள்ளை யடிக்கும் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக உலகில் முதல் முதலாக அதிகாரம் அனைத்தும் உழைக்கும் மக்களுக்கே என்ற சுரண்டல் இல்லாத சோசலிச குடியரசை  நிறுவிய பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் லெனின் 102 வது நினைவு நாள் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் காவேரி சிறப்பு அங்காடி அருகில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேவையா தலைமையில் வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சர்வதேச ஜனநாயக விதிமுறைகளை மீறி வெனிசுலா அதிபரை கைது செய்தது, அதிகாரத்தை நிறுவ முயற்சிப்பது, கிரீன்லாந்து நாட்டை மிரட்டுவது, தென் அமெரிக்கா நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க போர் உள்ளிட்ட அபாயகரமான நடவடிக்கைகளை எடுப்பது உலக நாடுகளை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், அதிபர் ட்ரம்பின் மனித உரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அமைதியை, ஜனநாயகத்தை விரும்புகின்ற உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் மேற்கொள்வது.

இந்திய ஒன்றியத்தில் பிரதமர் மோடியின் மக்கள் விரோத தொழிலாளர், விவசாயி விரோத கொள்கைகளை முறியடிக்கவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக வெறுப்பு அரசியலையும்,  மத பிளவுகளையும் ஏற்படுத்துகின்ற, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது பொருளாதார தாக்குதலை தொடுக்கின்ற, அதானி,அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பாஜக, ஆர் எஸ் எஸ்,  சங்பரிவார் உள்ளிட்ட அமைப்புகளின் கொள்கைகளை முறியடிக்கவும், தமிழ் தேசியம் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின்  உரிமைக்கான போராட்டங்களை ஒன்றிணைக்கவும் இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், ஜனநாயக சக்திகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து உறுதியான போராட்டத்தை மேற்கொள்வது என்றும் லெனின் நினைவு நாளில் உறுதி ஏற்கப்பட்டது.

நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் தாமஸ், பொருளாளர் லட்சுமணன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகி செல்வம் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, தனபால், பக்ருதீன், திலீப்குமார்,மாலை நேர மார்க்கெட் சங்க தலைவர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article