தஞ்சாவூரில் 35 அடி உயர அரிவாள்: பிரமிப்பில் மக்கள்! தேரோட்டமும் தயார்!

6 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாளியக்காடு கிராமத்தில் மதுரை வீரன், பொம்மி அம்மன், வெள்ளை அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 35 அடி உயர அரிவாள் நிறுவப்பட்டது. தஞ்சை மாவட்ட பகுதியில் இத்தனை அடி உயர அரிவாள் கோயில் நிறுவப்படுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாளியக்காடு கிராமத்தில் மதுரை வீரன், பொம்மி அம்மன், வெள்ளை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பல லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 13 ந் தேதி கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் பக்தர் ஒருவர் ஏற்பாட்டின் பேரில் சுமார் ரூ.2 லட்சம் செலவில் 35 அடி உயர பிரமாண்ட அரிவாள் கிரேன் மூலம் கோயிலில் நிறுவப்பட்டது, தமிழகத்திலேயே மிகப்பெரிய அரிவாள் இதுவாகும். பக்தர் ஒருவர் தனது குலதெய்வ கோயிலுக்காக வேண்டிக் கொண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரிவாள் பட்டறையில் ஆர்டர் செய்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த அரிவாள் இக்கோயிலில் அரிவாள் நிறுவப்பட்டது. அரிவாளின் கைப்பிடியின் நீளம் 10 அடி, ஆரம்பத்தில் ஒன்றே முக்கால் அடி அகலத்தில் தொடங்கி நுனியில் ஆறரை அடியில் முடிவடைகிறது, இந்த பிரம்மாண்ட அரிவாளை அப்பகுதி பொதுமக்கள் பிரமிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

கோயில் தேர் வெள்ளோட்டம்

காசவளநாடு கோவிலூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் பங்குனி உத்திர பிரமோத்சவத்தின் போது தேரோட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தேர் பழுதானதால் தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து பங்குனி உத்திர பிரமோத்சவ தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் மற்றும் காசவள நாட்டார்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தேருக்கான செலவினை வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஒரு மாத காலமாக புதிய தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாளை (ஜூன் 10) மாலை 4.35 மணிக்கு தேர் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. தேர் வெள்ளோட்டத்தினை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

முன்னதாக இன்று (ஜூன் 9) மாலை கணபதி பூஜை, முதலாம் காலயாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. பின்னர் நாளை காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4.35 மணிக்கு 12 அடி உயர திருத்தேரின் வெள்ளோட்டமும் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை காசவளநாட்டைச் சேர்ந்த 18 கிராமத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

Read Entire Article