தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...

2 weeks ago 4
ARTICLE AD

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தங்கையின் காதலனை குத்திக்கொலை செய்த சிறுவனுக்கு, இளஞ்சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கூலித்தொழிலாளி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் அண்ணன் காதல் தொடர்பை கைவிடுமாறு இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அந்த இளைஞர் காதலை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, சிறுமியின் அண்ணனுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த முன்விரோதம் நாளடைவில் தீவிரமடைந்தது.

இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கூலித்தொழிலாளியை குத்தியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கைது செய்து கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் இளஞ்சிறார் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையில், விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது சிறுவன் வெளியே வந்த நிலையில் மாயமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இளைஞர்கள் குழுமத் தலைவர், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுவனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Read Entire Article