உலகின் 'பெரிய அண்ணன்' என்று கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முடிவுக்கு வருவதாக வெளியிட்டிருந்த செய்தியை நீ என்ன சொல்வது நான் என்பது கேட்பது என்ற மனநிலையில் பாகிஸ்தான் நடத்தி வரும் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.

போருக்கான துவக்கப்பள்ளி

காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து எனப்படும் பஹல்காமின் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதல்களால் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் கடந்த ஏழாம் தேதி பாகிஸ்தான் மீது இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதில் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து போர் மூண்டதை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.

பாகிஸ்தான் பதில் தாக்குதல்

இந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாத முகாம்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டது என்றும் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் இந்தியா ராணுவம் தெரிவித்திருத்தது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் ஒத்திகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கொடூர தாக்குதலை முன்னெடுத்தது. 15 நகரங்களை தகர்க்க பாகிஸ்தான் மூலம் அனுப்பப்பட்ட ஏவுகணைகளை நடுவானிலேயே இந்திய ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டது.

தொடர்ந்து போர் பதற்றம் ஏற்பட்டது நிலையில் காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அப்பாவி மக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானுக்குள் நுழையாமல் இந்தியா எல்லையில் இருந்தே நடத்தப்பட்ட இந்த துல்லியமான தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். ஜெய்ஷ் இ முகமத் பயங்கரவாத தலைவரான மஸ்ஜித் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானதும் ஆபரேஷன் சிந்ததூரின் முக்கிய அம்சமாக கருதப்பட்டது.

இருளில் இந்தியாவின் பல நகரங்கள்

தொடர்ந்து காஷ்மீர் எல்லை பகுதிகளான பஞ்சாப், ஜம்மு, உத்தம்பூர், ஸ்ரீநகர் போன்ற முக்கிய நகரங்களில் மின் தடை செய்யப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். போர் குறித்த அச்சம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் உலக நாடுகளின் வெவ்வேறு விதமான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன. இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் தனிநாடு கேட்டு போராடி வந்த நிலையில் அங்குள்ள விடுதலை ராணுவ படைகளும் பாகிஸ்தான் மீது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. பாகிஸ்தான் உலக நாடுகளை உதவிக்கோரி வந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தத்திற்கு இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

நீடிக்காத நிம்மதி

போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் முழு மகிழ்ச்சியை அனுபவிக்க எண்ணிய சில மணி நேரங்களிலேயே ஸ்ரீ நகரில் ஆங்காங்கே வெடிச்சத்தம் கேட்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா X-ல் பதிவிட்டிருந்தார். போர் உடன்படிக்கைக்கு எதிராக மீண்டும் பாகிஸ்தான் இந்தியா மீது கொடூர தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு இந்திய ராணுவமும் கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. இதனிடையே குஜராத் பூஞ்ச் பகுதியில் விமானங்கள் பரப்பதாகவும், ஹரியானா மாநில அம்பாலா ஆகிய நகரங்களிலும் மின்தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்பதாகவும், சிகப்பு கலரில் ஒளிக்கதிர்கள் தென்படுவதாகவும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு

உலகின் 'பெரிய அண்ணன்' என்று கருதப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முடிவுக்கு வருவதாக வெளியிட்டிருந்த செய்தியை நீ என்ன சொல்வது நான் என்பது கேட்பது என்ற மனநிலையில் பாகிஸ்தான் நடத்தி வரும் இந்த தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. அத்துமீறலை உடனடியாக பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் நிலைமையை புரிந்து கொண்டு பாகிஸ்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.