<p>தேசிய தலைநகர் டெல்லியில் ரோஹிணி நகரில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளி அருகே இன்று காலை வெடிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குண்டுவெடிப்பா என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.</p>
<p>பிரசாந்த் விஹார் பகுதியில் இந்த பள்ளி அமைந்துள்ளது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என டெல்லி தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒன்று வெடித்ததன் காரணமாக பள்ளி சுவர், அருகில் உள்ள கடைகள், கார் ஆகியவை சேதமடைந்தன.</p>
<div id="tw-target-rmn-container" class="tw-target-rmn tw-ta-container F0azHf tw-nfl"> </div>