டிகிரி முடிச்சவங்களா பாஸ் நீங்க... அட சூப்பர் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்கு

1 month ago 2
ARTICLE AD

தஞ்சாவூர்: டிகிரி முடிச்சவங்களா பாஸ் நீங்க. அட சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்குங்க. ஆமாங்க வங்கியில் மேனேஜர் ஆக சூப்பர் சான்ஸ். விடாதீங்க. போனா வராது. கடைசி தேதி வரைக்கும் காத்திருக்காம இன்னைக்கே விண்ணப்பித்தை அனுப்பிடுங்க.

பஞ்சாப் அண்டு சிந்து வங்கி, MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பதவிக்கு 30 காலியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கு. டிகிரி முடித்த, 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இந்த வங்கி வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அப்புறம் என்ன உடனே விண்ணப்பத்தை தட்டி விட்டுடுங்க.

பஞ்சாப் அண்டு சிந்து வங்கியில் MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் தலைமையிடத்துடன் நாடு முழுவதும் 1,800 கிளைகள், 25 மண்டல அலுவலகங்களுடன் செயல்படும் இந்த பொதுத்துறை வங்கி, தற்போது 30 காலியிடங்களை நிரப்ப உள்ளது. வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன் உள்ளவர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. போட்டிகள் அதிகம் இருந்தாலும் உங்கள் திறமையை நிரூபித்தால் வெற்றி உங்களுக்குதானே. அதனால இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மார்க்கெட்டிங் அல்லது நிதி துறையில் எம்பிஏ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கஸ்டமர் ரிலேஷன்ஷிப் அல்லது கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

01.11.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 25 வயதும், அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும் — எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வேலை வாய்ப்புக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ. 800 மற்றும் எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100 மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://punjabandsind.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறும் செயல்பாடு கடந்த 5.11.2025ம் தேதியே தொடங்கிட்டாங்க. கடைசி தேதி வரும் 26.11.2025 ஆகும்.

விண்ணப்பிப்பதற்கு முன் முழு அறிவிப்பையும் கவனமாக படித்து தகுதி மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். டிகிரி முடித்தவர்களுக்கு இது ஒரு அருமையான வங்கி வேலை வாய்ப்பு தவற விடாதீர்கள்.

Read Entire Article