டாஸ்மாக் ஊழலில் சிக்கிய டிராகன் பட நடிகை..? ஒரு நைட் பார்ட்டிக்கு லட்சத்தில் சம்பளமா?

7 months ago 5
ARTICLE AD

டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து தாமாக முன்வந்து டாஸ்மாக் தொடர்பான இடங்களில் திடீர் சோதனைகளை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிரடியாக அறிவித்தது. அதோடு, விசாரணையையும் தொடங்கியது. இந்த விசாரணையில் டிராகன் பட நடிகை கயடு லோஹர் சம்பந்தப் பட்டிருப்பதாக தற்போது தகவல்கள் பரவி வருகின்றன.

டாஸ்மாக் ஊழலில் கயடு லோஹர்

கடந்த 16-ம் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விசாகனின் வீட்டில் அமலாக்கத் துறை  சோதனை நடத்தினர். அதன் பிறகு, அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, விசாகனின் வீட்டின் அருகே, கிடந்த நிலையில் சில ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். அதில், ரத்தீஷ் என்பவரிடம், டாஸ்மாக் நிர்வாக விஷயங்கள் குறித்து விசாகன் பேசிய வாட்ஸ்அப் சாட்டுகளின் ஸ்க்ரீன்ஷாட் சிக்கியது.

இதைத் தொடர்ந்து ரத்தீஷை விசாரிக்க அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் பூட்டு போட்டுள்ளனர். அந்த ரத்தீஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என தகவல் வெளியானதையடுத்து, இந்த விஷயம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஒரு இரவு பார்ட்டிக்கு லட்சத்தில் சம்பளம்

தற்போது சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்து பிரபலமான கயடு லோஹர் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப் பட்டிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஊழலில் தொடபுடையவர்கள் நடத்திய பார்ட்டிக்கு கயடு லோஹர் கலந்துகொண்டதாகவும் ஒரு இரவு பார்ட்டியில் விருந்தினராக செல்ல அவர் ரூ 35 லட்சம் சம்பளமாக பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளன. இந்த தகவல்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் கயடு லோஹர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Read Entire Article