ஜே.இ.இ. அட்வான்ஸ்டு 2026: அகில இந்திய அளவில் நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

1 hour ago 1
ARTICLE AD

சென்னை: தேசிய அளவில் புகழ்பெற்ற உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாபெரும் சாதனையைப் படைத்து கல்வித்துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.

தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் (All India Rank), முதல் 20 இடங்களுக்குள் 7 ரேங்குகளை நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர். மேலும், முதல் 100 ரேங்குகளில் 37 இடங்களையும், முதல் 1,000 ரேங்குகளில் 220 இடங்களையும் நாராயணா மாணவர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

தேசிய அளவிலான டாப் ரேங்கர்கள்:

நாராயணா கல்வி நிறுவனத்தின் வகுப்பறை பயிற்சி மாணவரான குச்சி சந்தீப், அகில இந்திய ஓபன் பிரிவில் 5-வது ரேங்க் (AIR 5) பெற்று சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பிரத்யேக 'nPrep' திட்டத்தின் கீழ் பயின்ற பி. ஜெயகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் (AIR 6) பெற்றதோடு, Gen-EWS பிரிவில் தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.

இதர முக்கிய சாதனையாளர்கள்:

மனு பரமேஸ்வரன் – AIR 13 (வகுப்பறை பயிற்சி)
பிரின்ஸ் சௌதரி – AIR 14 (nPrep)
வெல்துர்த்தி ஹர்ஷித் – AIR 15 (வகுப்பறை பயிற்சி)
தனய் அகர்வால் – AIR 16 (nPrep)
அனிஷ் முப்பல்லா – AIR 20 (nPrep)

தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்:

தமிழ்நாட்டிலிருந்து நாராயணா பள்ளியின் வகுப்பறை பயிற்சி மாணவரான தம்மினாகிரிஷ், அகில இந்திய அளவில் 89-வது ரேங்க் (AIR 89) பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடைபெற்ற ஜே.இ.இ. மெயின் 2026 தேர்விலும் அகில இந்திய அளவில் 10-வது ரேங்க் (AIR 10) பெற்று தனது அசாத்திய திறமையை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சில முக்கிய சாதனையாளர்கள்:

மகில் மோகன் மணி – AIR 130
சிவானி பரத்குமார் – AIR 433

பிரிவுகள் வாரியாக மற்றும் ஓபன் பிரிவு சாதனைகள்:

பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கான தரவரிசையிலும் நாராயணா மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். முதல் 100 ரேங்குகளுக்குள் 45, 73, 77 மற்றும் 89 போன்ற சிறந்த பிரிவு ரேங்குகளைப் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் ஓபன் பிரிவின் கீழ்:

முதல் 100-ல் – 1 மாணவர்
முதல் 500-ல் – 3 மாணவர்கள்
முதல் 2,000-ல் – 6 மாணவர்கள்
முதல் 5,000-ல் – 13 மாணவர்கள்
முதல் 10,000-ல் – 18 மாணவர்கள்
முதல் 15,000-ல் – 25 மாணவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இவர்களோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக 55-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றிக்கான ரகசியம்: 'திஷா' மற்றும் 'CDF' தொழில்நுட்பம்: இந்த அசாத்திய வெற்றி குறித்து நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் பி. சிந்துரா கூறுகையில், "எங்களது வலுவான கல்வி முறை, கருத்து அடிப்படையிலான கற்றல் (Concept-based learning) மற்றும் தொடர்ச்சியான நவீன தொழில்நுட்பப் பயிற்சியே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். கல்வித் தர மேம்பாட்டோடு மட்டுமின்றி, மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதற்காக 130-க்கும் மேற்பட்ட உளவியல் நிபுணர்களைக் கொண்டு இயங்கும் 'திஷா' (DISHA) திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறோம்.

எங்களது பிரத்யேக 'Concept Definition Formula' (CDF) கற்பித்தல் முறையானது மாணவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்துகிறது. எங்களது ஆசிரியர்கள் வெறும் கற்பிப்பவர்களாக இல்லாமல், மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்" என்றார்.

கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி:

நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான ஷரணி பொங்கூரு கூறுகையில், "மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. எங்களது சொந்த ஆன்லைன் கற்றல் தளமான 'nLearn' மூலம் மாணவர்களின் அன்றாடச் செயல்திறனை நேரடியாகக் கண்காணித்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் கற்றல் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலை வழங்கினோம். அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பத்தையும் சரியாக இணைத்ததே இந்த சாதனைக்குக் காரணம். நாராயணாவில் எப்போதும், 'மாணவர்களின் கனவுகளே எங்களின் கனவுகள்' என்று நாங்கள் உழைக்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

தேசிய அளவில் வரலாற்றுச் சாதனை படைத்த நாராயணா கல்வி நிறுவன மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Read Entire Article