ஜாமீனில் எடுத்த தாயை கொடூரமாக கொன்ற 20 வயது மகன்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் - நடந்தது என்ன?

16 hours ago 3
ARTICLE AD

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்த சின்னபாப்பா(42) என்பவரின் மகன் தேவராஜ் (19). கூலி வேலை செய்து வரும் இவர், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த தனது தாய் சின்னபாப்பாவை, கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த இண்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, தாயைக் கொலை செய்த தேவராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் காவலரின் தொப்பி அணிந்து கஞ்சா போதையில் பஸ் நிலையத்தில் அட்ராசிட்டி செய்ததில் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர், நேற்று ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இன்று அவரது தாயை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தவர் சின்னப்பாப்பா. வீட்டுக்கு வந்த மகனிடம் அறிவுரை கூறியுள்ளார். இதனால், ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் குத்திக் கொலை செய்துள்ளார்.

கஞ்சா போதையில் பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article