ஜாக்பாட்! மாமனார், மாமியாருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு லீவு - முதலமைச்சர் உத்தரவு

1 year ago 7
ARTICLE AD

வட கிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த மாநிலத்தில் ஹிமாந்தபிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் அரசு பணியாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அந்த மாநில அரசு வௌயிட்டுள்ளது.

மாமனார், மாமியார்களுடன் நேரம் செலவிட விடுமுறை:

அசாம் மாநில அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் மாமனார், மாமியார்களுடன்  நேரத்தை செலவிடுவதற்காக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6ம் தேதி மற்றும் நவம்பர் 8ம் தேதி இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்த மாநில முதலமைச்சர் ஹிமாந்தபிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த சிறப்பு விடுமுறை பெற்றோர்கள் அல்லது மாமனார், மாமியார் இல்லாதவர்களுக்கு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் ஹிமாந்தபிஸ்வா 2021ம் ஆண்டு அவரது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். வரும் நவம்பர் 7ம் தேதி சாத் பூஜை, நவம்பர் 8 அரசு வழங்கிய சிறப்பு விடுமுறை, நவம்பர் 9ம் தேதி இரண்டாவது சனி, நவம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் தொடர் விடுமுறையாக வருகிறது. வட இந்தியாவில் சாத் பூஜை மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும்.

சாத்பூஜையை சிறப்பாக கொண்டாடும் விதமாகவும், அரசு பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரத்தை செலவிடும் பொருட்டும் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டிருப்பதாக பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: IAS Officer: முழுசா கலெக்டரே ஆகல அதுக்குள்ள இவ்வளவு ஆட்டமா? தூக்கி அடிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி, தேர்வில் மோசடி?

மேலும் படிக்க: PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

Read Entire Article