பிரபல மாடலாக வலம் வந்த ஆரவ், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, சைத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் டைட்டில் வின்னராக ஆனார். நடிகை ராஹியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2021 ஆம் வருடம் ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் ஆரவ்

"கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு,இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது. இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது. விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன், இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.கடவுளின் அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்." என ஆரவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.