சொத்து வாங்குவதில் பொது அதிகாரம் ; உங்கள் பணத்தை இழக்காமல் இருக்க இதை தெரிஞ்சிக்கோங்க

1 month ago 4
ARTICLE AD

பொது அதிகாரம்

சொத்து பரிமாற்றத்தின் போது அதற்கான பத்திரப்பதிவு உள்ளிட்ட நிகழ்வுகளில் அதன் அசல் உரிமையாளர் நேரில் பங்கேற்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் அசல் உரிமையாளரால் நேரடியாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படலாம்.

உடல்நிலை பாதிப்பு , வயது முதிர்வு, பணி காரணமாக வெளிநாட்டில் இருப்பது போன்ற சில காரணங்களால் உரிமையாளரால் நேரடியாக பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் உரிமையாளரின் சார்பில் ஒருவரை முகவராக நியமித்து, பத்திரப்பதிவு பணிகளை முடிக்க அதிகாரம் வழங்கலாம்.

உரிமையாளர் ஆக முடியாது

பொது அதிகாரம் பெற்ற நபர் எப்படி செயல்பட வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை பவர் பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும். பவர் பெற்றதால் முகவர் அந்த சொத்தின் உரிமையாளர் ஆக முடியாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பொது அதிகாரம் என்பது சொத்தின் உரிமை மாற்றுவதற்கான பத்திரப்பதிவு பணிகளை உரிமையாளர் சார்பில் மூன்றாவது நபர் மேற்கொள்வது என்பது மட்டுமே.

வீடு, மனை வாங்குவோர் பொது அதிகாரம் பெற்ற நபரை உரிமையாளராக கருத கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் எதார்த்த நிலையில் பல இடங்களில் பொது அதிகாரம் சொத்து பெற்ற முகவர் தான் சொத்து விற்பனை தொடர்பான அனைத்து பேச்சுகளையும் மேற்கொள்கிறார். அவர் அசல் உரிமையாளரை காட்டுவதற்கும் மறுக்கும் சூழல் நிலவுகிறது.

இது போன்ற சொத்துக்களை வாங்கும் நபர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் மிக தெளிவாக யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். ஒரு உரிமையாளர் தனக்கான முகவராக ஒருவர் இருக்க பொது அதிகாரம் கொடுத்து இருப்பது பிரச்சனை இல்லை.

ஆனால் சொத்துக்கான பணத்தை முழுமையாக கொடுத்த சில நபர்கள் பதிவு செலவை தவிர்க்கும் நோக்கில் தங்கள் பெயருக்கு பொது அதிகாரம் வாங்கி வைத்து கொள்கின்றனர். இதை பயன்படுத்தி அவர்கள் அடுத்த கட்ட விற்பனையை மேற்கொள்கின்றனர்.

இது போன்ற பொது அதிகாரத்தை நம்பி சொத்து வாங்கினால் , அது குறித்த தணிக்கையில் சம்பந்தப்பட்ட பொது அதிகாரம் மீது ஆட்சேபம் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் இது முத்திரை தீர்வையை செலுத்தாமல் ஏமாற்றியதாக கருத்தில் கொள்ளப்படும்.

இதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சொத்து வாங்கிய நபர் செலுத்தும் நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பொது அதிகாரத்தை நம்பி சொத்து வாங்குவோர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

Read Entire Article