சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரொமோ வெளியீடு
8 months ago 6
ARTICLE AD
சொட்ட சொட்ட நனையுது
Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள்
இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கலக்கப்போவது யாரு புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் -  Adler Entertainment
இயக்கம் - நவீத் s ஃபரீத் (debute)
திரைக்கதை வசனம் - கலக்கப்போவது யாரு புகழ் ராஜா
இசை - ரெஞ்சித் உன்னி
ஒளிப்பதிவு - ரயீஷ்
எடிட்டிங்க்  -  ராம் சதீஷ்
கலை இயக்கம் - ராம்குமார்
நடனம் - அப்சர்
மக்கள் தொடர்பு - A.ராஜா
Read Entire Article