சேலம் கொடூரம்: கணவனை வெட்டிக்கொன்று 'ட்ராமா' போட்ட மனைவி... கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

1 month ago 5
ARTICLE AD

சேலத்தில் பிரபல வியாபாரி மரணத்தில் மனைவியே கொன்று நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில், காரில் ரத்த வெள்ளத்தில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி பிணமாக கிடந்த காட்சி, அப்பகுதியையே உலுக்கியது. காரை மறித்த 3 பேர் கொண்ட கும்பல் கணவரை கொன்று, 12 பவுன் நகையைப் பறித்து சென்றுவிட்டது என பூபதியின் மனைவி சுஜிதாஸ்ரீ கதறி அழுதார்.
ஆனால், பூபதியின் குடும்பத்தினர் தெரிவித்த சந்தேகத்தின் பேரில் களமிறங்கிய ஓமலூர் போலீஸார் சுஜிதாஸ்ரீயின் கண்ணீருக்கு பின்னால் மறைந்திருந்த அந்த அதிர்ச்சி உண்மையை கண்டுபிடித்தனர்.

சொத்து பிரச்சனையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறு, கணவரின் தினமொரு கொடுமை மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார் சுஜிதாஸ்ரீ. நள்ளிரவில் கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் தனது 13 வயது மகனுடன் சேர்ந்து, கணவன் பூபதியை வீட்டிலேயே கொடூரமாக வெட்டி கொன்றுள்ளார்.

பின்னர், உடலை காரில் ஏற்றி சென்று வழிப்பறி கும்பல் கொன்றதாக சினிமா பாணியில் கதையளந்தது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து சுஜிதாஸ்ரீ, கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிறுவன் சேலம் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சேலத்தையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த கொடூர கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article