சேலத்தில் உதவி வரவேற்பாளர் பணி ! வயது வரம்பு, கல்வித்தகுதி, சம்பளம் முழு விவரம் !

12 hours ago 3
ARTICLE AD

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு நவம்பா் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு பாா்வையற்ற பட்டியல் பொதுப்பிரிவு-பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், முழுமையாக பாா்வைத் திறனற்றவராகவும், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். நாற்காலி ஒயா் பின்னுதலில் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியம். சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 1.8.2023 முதல் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடம் நிலை-2-க்கு தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம் ரூ. 15,900 முதல் ரூ.50,400 என்ற ஊதிய விகிதத்தில் வழங்கப்படும்.

விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் பதிவு அட்டை, பட்டியல் இனத்தவா் என்பதற்கான சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா், குடும்ப அட்டை, ஜாதிச் சான்றிதழ், 2 பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:11, சேலம் மாவட்டம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ நவம்பா் 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 0427- 2415242, 9499933489 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article