<p> அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ராசி அதிபதி செவ்வாய் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று விளங்குகிறார்.... அஷ்டமஸ்தானம் என்பது என்ன ஒருவருடைய வாழ்க்கையில் அவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடிய மறைவான ரகசியங்களை குறிக்கும் அப்படிப் பார்த்தால் அடுத்தவர்களுடைய தனத்தையும் அது குறிப்பதால் பெரும் பணம் பொருள் சேர்க்க பிரயத்தன படுபவர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை சந்திக்கலாம்... குறிப்பாக வீடு மனை யோகமும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் இது சிறப்பான காலகட்டம்... செவ்வாய் 3 நட்சத்திரங்களில் பயணிக்க போகிறார் குருவினுடைய நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ள வாய்ப்புண்டு அதிலும் எதிர்பாராத திடீர் பயணங்கள் ஆக இருக்கும் அந்த பயணங்கள் அனைத்துமே உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கித் தரும்.... செவ்வாயினுடைய கடினமான குணங்கள் மேஷ ராசிக்கு இயல்பாக இருப்பதால் அவர் அஷ்டம ஸ்தானத்தில் இருந்தாலும் கூட தனக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை மேஷ ராசியின் நன்கு அறிந்திருப்பீர்கள்.....</p>
<p> கடன் தொல்லைகளால் சில காலங்கள் சிக்கித் தவித்து இருந்தீர்கள் அதற்கெல்லாம் விடிவுகாலமாக அஷ்டமத்து செவ்வாய் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தர காத்திருக்கிறார்... சனியினுடைய அனுஷ நட்சத்திரத்தில் செவ்வாய் பயணம் செய்யும் பொழுது தொழில் வியாபாரம் போன்ற காரியங்களில் நல்ல முன்னேற்றமான பலன்களை கொடுக்கப் போகிறார் அதுவும் உங்களுக்கு பத்து மற்றும் பதினோராம் அதிபதியாக வருவதால் செவ்வாயினுடைய அனுஷ நட்சத்திர பயணம் வாழ்க்கையில் உங்களுக்கு புதிய அனுபவங்களையும் புது புது மனிதர்களையும் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.... இறுதியாக செவ்வாய் முதல் நட்சத்திரமான கேட்டையில் பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு கடன் சுமை குறைவதற்கான வழிவகைகள் ஏற்படும் காரணம் எத்தனை காலம் நாம் வேலை செய்து கடனை அடைக்க முடியவில்லை வங்கிகள் மூலம் அதற்கான தீர்வை காணலாம் என்று எண்ணியிருந்தீர்கள் என்றால் இது நல்ல பலன்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.... இப்படியாக செவ்வாய் தன்னுடைய ஆட்சியின் அமைப்புகளை அஷ்டம பாவத்திலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருத்தல் அல்லது சரியாக உடலை பராமரிக்காமல் இருந்து நோய் வந்தவர்களுக்கு கூட இந்த அஷ்டமத்து செவ்வாயின் அமைப்பு நல்ல சாதகமான உயிர் காக்கும் அமைப்பாக இருக்கிறது....</p>
<p><br />40 நாட்கள் மட்டுமே செவ்வாய் விருச்சகத்தில் பயணம் செய்தாலும் கூட அதற்கான பலனை நீங்கள் சாதாரணமாக எடுத்து விடலாம் மேஷ ராசி மற்றும் ரிஷப ராசியின என்ன செய்தாலுமே எதோ ஒரு வகையில் செவ்வாயின் தொடர்பு இருந்து ஆக வேண்டும் நீங்கள் அந்த வீட்டில் ராசியை வைத்து பிறந்திருக்கிறீர்கள் என்றால் அதனுடைய கர்மாக்கள் உங்களுக்கு நல்லவையாக வழிவழியாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை... அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டு வாருங்கள் முருகனை வணங்கினால் இருக்கின்ற அனைத்து சங்கடங்களுக்கும் நிறைந்த தீர்வு கிடைக்கும்... அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முருகனுடைய எந்த அளவுக்கு முக்கியம் என்பதை மேஷ ராசியினர் எப்பொழுதும் உணர்ந்து வைத்திருப்பார்கள்.... வருகின்ற காலம் வசந்தகாலமாக உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கக்கூடிய நல்ல ஆட்சி அமைப்புகளில் செவ்வாய் வருவது உங்களுக்கு என்றென்றும் மேன்மையே....</p>