செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

4 months ago 6
ARTICLE AD

செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகர்கள் சுத்த ஜாதகத்தோடு இணைக்கலாமா..?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

குணத்தில் கடுமையாக நடந்து கொள்வது செவ்வாயின் தன்மை... 1,4,7,8,12 இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் எனப்படுகிறது... இப்படி செவ்வாய் இந்த இடங்களில் இருந்தால் என்ன நடக்கும்...

1-ம் வீட்டில் செவ்வாய்..!!!

ஒன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகரே கடுகடு என்று இருப்பார்... ஒன்றாம் இடத்தில் செவ்வாய் வலிமையாக இருந்தால் தோஷமில்லை..

ஒருவேளை நன்றாக வலிமையான செவ்வாயாக இருந்தால் மற்றவர்கள் கோபப்பட்டால் கூட அவர் கோபப்பட மாட்டார்... வம்பு தும்புக்கு பெரிதாக போக மாட்டார்... மனைவியோடு சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ்க்கையை நடத்திச் செல்ல முற்படுவார்...

4-ம் இடத்தில் செவ்வாய்..!!!

இவர்களுக்கு வீடு யோகம் உண்டு மனை யோகம் உண்டு... அதேபோல உடலில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கும் அதனால் வாழ்க்கை துணைக்கு சிறிய சிரமம் ஏற்படும்... எப்பொழுதும் உடல் உஷ்ணமாக வைத்திருக்கக்கூடாது நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அடிக்கடி மோர் அருந்தலாம் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம் இளநீர் சாப்பிடலாம்.. அதேபோல் வாழ்க்கை துணைக்கு செவ்வாய் சம்பந்தப்பட்ட உத்தியோகம் அமையும்...

7-ம் இடத்தில் செவ்வாய்..!!!

ஏழாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் வாழ்க்கை துணையோடு எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார் என்று சொல்லப்படுகிறது ஆனால் உங்களுக்கு வலிமையான செவ்வாய் இருந்தால் வாழ்க்கைத் துணை எவ்வளவு சண்டை போட்டாலும் அதை பொறுத்துக் கொண்டு போகக்கூடிய சக்தி உண்டாகும்...

8-ம் இடத்தில் செவ்வாய்...!!!

வாழ்க்கை துணை எட்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் உடலில் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் இருக்கலாம் உடலில் மறைவான இடத்தில் வியாதிகள் ஏற்படலாம் வாழ்க்கைத் துணையின் வீட்டாரிடம் சில சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்... ஆனால் அதுவே வலிமையான செவ்வாயாக இருந்தால் இப்படியான சூழ்நிலையில் நீங்கள் சிக்காமல் இருப்பீர்கள்...

12-ம் இடத்தில் செவ்வாய்...!!!

பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் பெரிய குற்றமில்லை ஆனால் நிம்மதியாக வீட்டில் சண்டை இல்லாமல் உறங்க வேண்டும் என்றால் ஆன்மீகத்தில் மனதை செலுத்த வேண்டும் குறிப்பாக முருகர் வேண்டுதல் பன்னிரண்டாம் இட செவ்வாய் மட்டுப்படுத்தும்...

செவ்வாய் தோஷம் ஜாதகம் சுத்த ஜாதகத்தோடு இணைக்கலாம்!!!

கண்டிப்பாக இணைக்கலாம் முன்பெல்லாம் செவ்வாய் தோஷம் இருந்தால் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகரைத்தான் இணைக்க வேண்டும் என்று கூறுவார்கள் அதற்கு காரணம் இருவர் சண்டை போடும் பொழுது ஈக்குவலாக சரிசமமாக சண்டையிட்டால் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு அவரவர் அமைதியாகி விடுவார் என்று ஒரு கணக்கு உண்டு... ஆனால் தற்பொழுது செவ்வாய் தோஷம் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி நீ உன் வேலையை பார் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக்கு நீ அறிவுரை கூறத் தேவையில்லை என்று கராராக  சண்டை போடுகிறார்கள்... இடம் பொருள் பார்த்து தற்போது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சுத்த ஜாதகத்தோடு கண்டிப்பாக இணைக்கலாம் தோஷமில்லை…

உங்களுக்கு ஜாதகத்தில் எந்த இடத்தில் செவ்வாய் இருந்தாலும் சரி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் அமைதியாக இருங்கள் கோபப்படாமல் இருங்கள் சாந்தமான உணவுகளான சைவத்தை வாரத்தில் நான்கு நாட்கள் நிச்சயமாக எடுத்துக் கொள்ளுங்கள் அசைவம் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் இல்லை உங்களுக்கு கடுமையான செவ்வாய் தோஷம் ஏழில் உள்ளது என்றால் நீங்கள் சைவத்திற்கே மாறி விடுங்கள் பிரச்சனையே வராது…

Read Entire Article