Chennai Weather Updates: சென்னையில் வெயில் வாட்டி நிலையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், இன்று (11-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவுத்துள்ளது.

மேலும், நாளை (12-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தழகம், ைவ மற்ம் காைரக்கால் பகக்கான னசரி வானிைல அக்ைகhttps://t.co/467dVuUdtd pic.twitter.com/6HQ1bosw2S

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 11, 2025

தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கு வானிலை:

நேற்று (10-04-2025), மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (11-04-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் வலுவிழந்தது, இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை ( 11-04-2025 மற்றும் 12-04-2025 ) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையடுத்து 13-04-2025 முதல் 17-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் 'காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

11-04-2025 மற்றும் 12-04-2025 ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் வரும் 15-04-2025 நாளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.