தமிழ்நாட்டில் வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது”வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

சென்னையில், நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க கூடும் எனவும், வரும் 15 ஆம் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் , வரும் 16 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மழை பெறும் மாவட்டங்கள்:

தஞ்சாவூர், திருவாரூர், மதுரை,தேனி,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது