சென்னையில் அதிர்ச்சி !! வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல்

சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வளசரவாக்கம், கைகான்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் இடத்தில் சோதனை செய்து, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த காயத்ரி ( வயது 31 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட காயத்ரி மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட காயத்ரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 4 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆன்லைன் App மூலம் போதைப் பொருள் வாங்கி வைத்திருந்த நபர் கைது. 3 கிராம் மெத்தம் பெட்டமைன், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் ஆகியவை பறிமுதல்

கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையாளர் தனிப்படை காவல் குழுவினர் மற்றும் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து மதுரவாயல், மேட்டுக்குப்பம் பகுதியில் கண்காணித்து, அங்கு சட்ட விரோதமாக போதைப் பொருள் வைத்திருந்த புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த அமீர்பாஷா ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 3 கிராம் மெத்தம் பெட்டமைன், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அமீர் பாஷா தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், Grindr App மூலம் அறிமுகமான நபரிடமிருந்து மெத்தம் பெட்டமைன் வாங்கியதும், இவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளதும் தெரிய வந்தது.

தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட அமீர்பாஷா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.