சென்னையில் அதிர்ச்சி !! பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாய்

1 month ago 7
ARTICLE AD

தாயின் கள்ளக் காதல்

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த இளம் பெண்ணின் தந்தை காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.மேலும் அவரின் தந்தை வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி இருப்பதால் அவர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அடிக்கடி உல்லாசம்

இளம் பெண்ணின் தாய்க்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறி இருக்கிறது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது கள்ளக் காதலனை வீட்டுக்கே வரவழைத்து அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த இளம் பெண்ணின் தாய் தனது தாயின் தவறான நடத்தை பற்றி அறிந்ததும் அவரிடம் பேசுவதையே அந்த இளம் பெண் தவிர்த்து வந்துள்ளார்.

தப்பி ஓடிய இளம்பெண்

கடந்த சில நாட்களுக்கு முன் அந்த இளம் பெண் மயக்க நிலையில் இருந்த போது அவரது தாயின் கள்ளக் காதலன் இளம் பெண்ணிடம் தவறாக நடந்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் அந்த நபரிடமிருந்து தப்பித்திருக்கிறார்.

இது பற்றி தனது தாயிடம் கூறிய போது அவர் கண்டு கொள்ளாமல், மகளை ஒரு அறையில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. எனினும் அங்கிருந்து தப்பிய அந்த இளம் பெண், தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார்.

கடுமையான வயிற்று வலி - இளம் பெண் கர்பம்

உறவினரின் வீட்டிலேயே வசித்து வந்த இளம் பெண்ணுக்கு ஒரு நாள் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதைக் கேட்டு அந்த இளம் பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இது குறித்து அந்த இளம் பெண் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், பெற்ற மகளையே கள்ளக் காதலனுக்கு அவரின் தாயார் விருந்தாக்கிய அதிர்ச்சி தகவல் வெளியானது.

இளம் பெண் மீது மோகம் - சம்மதம் தெரிவித்த தாய்

தாயுடன் கள்ளத் தொடர்பில் இருந்த அந்த நபர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து போன போது, தாயின் கள்ளக் காதலனுக்கு இளம்பெண் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி கள்ளக் காதலன் இளம் பெண்ணின் தாயாரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்படி அந்த கொடூர தாய் தனது மகளுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்து விட்டு இளம் பெண் மயங்கிய நேரத்தை பயன்படுத்தி கள்ளக் காதலன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மகளை விருந்தாக்கி பணம் பெற்ற தாய்

இது போல பலமுறை நடந்த நிலையில், ஒரு நாள் மயக்கம் தெளிந்து எழுந்த இளம் பெண் தனது உடலில் பாலியல் துன்புறுத்தல் காயங்கள் இருந்ததாக அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அந்த கொடூர தாய், தனது மகளை கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கி வந்துள்ளார்.

கள்ளக் காதலன் வரும் போதெல்லாம் மகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து மயங்க வைத்துள்ளார். அவரது கள்ளக் காதலனும் அந்த இளம் பெண்ணை இது போல பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் இதற்காக கள்ளக் காதலனிடம் இருந்து தாய் அதிக அளவில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக் காதலன் - தாய் தப்பி ஓட்டம்

ஒரு கட்டத்தில் அரை மயக்கத்தில் இருந்த போது தாயின் கள்ளக் காதலன் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, அவரிடம் தப்பி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கள்ளக் காதலன் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்ற மகளை கள்ளக் காதலனுக்கு விருந்தாக்கிய தாயின் கொடூரச் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article