சென்னையில் அதிர்ச்சி !! குடிக்க மது தர மறுத்த நபர்; இளைஞர்களின் கொடூர செயல்

3 months ago 4
ARTICLE AD

மதுவால் வந்த பிரச்சனை ;

சென்னை கொருக்குப்பேட்டை கண்ணகி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 23 ) இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஏழாம் தேதி இரவு வேலை முடித்து எழில் நகர் ரயில்வே ட்ராக் ஓரமாக சென்று அங்கு மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்து மூன்று நபர்கள் மணிகண்டனிடம் வீண் தகராறு செய்து குடிப்பதற்கு மது கேட்டுள்ளனர்.

அவர் தன்னிடம் இல்லை என்று கூறவே , தாங்கள் வைத்திருந்த பிளேடால் மணிகண்டனின் கழுத்தை அறுத்து கல்லால் அடித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் மணிகண்டனுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து , புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ( வயது 19 ) தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் ( வயது 19 ) மற்றும் தட்ஷிணாமூர்த்தி ( வயது 20 ) என மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

" வீடு வாடகைக்கு உள்ளதா " என கேட்டு முதியவரிடம் செயின் பறித்த வாலிபர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் ரவி ( வயது 66 ) கடந்த 24 - ம் தேதி ரவியின் மனைவி வேலைக்கு சென்ற நிலையில் , ரவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் வீடு வாடகைக்கு உள்ளதா எனக் கேட்டுள்ளார். திடீரென ரவி கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்கச் சங்கிலியை பறித்து தப்பியுள்ளார். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில் ராமநாதபுரம்  கீழக்கரையைச் சேர்ந்த அப்துல் வாஹித் ( வயது 25 ) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து செயினை பறிமுதல் செய்தனர்.

போலியான ஆன்லைன் வர்த்தக முதலீடு , ரூ. 22.30 கோடி ரூபாய் மோசடி

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்வேதரன்யன் ( வயது 76 ) சில மாதங்களுக்கு முன் , போலியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து , 22.30 கோடி ரூபாயை இழந்துள்ளார். இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். புகார்தாரிடம் இருந்து பெற்ற தொகையில் 1.40 கோடி ரூபாய், குஜராத் மாநிலம் பந்தன் வங்கியில் ஸ்ரீ உமியா வாட்டர் பியூரி பிகேஷன்' என்ற பெயரிலான கணக்கில் செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி , மர்ம நபர்கள் வங்கி கணக்கு துவக்கியதும் கண்டறியப்பட்டது. மேலும் , மார்ச் ஏப்ரலில், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் வரவுவைக்கப்பட்டு, பெரும்பகுதி பணமும் திரும்பப் பெறப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. தொடர்ந்து , ஆமதாபாத் சென்ற சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட படேல் ஜே ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். ஆன்லைன் வர்த்தத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைகாட்டி மோசடி செய்தது தெரிய வந்தது. கைதானவரை அகமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின், உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மோசடியில் மீத பணம் எங்கே போனது என்பது குறித்து , கைதான படேல் ஜேவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட படேல் ஜே மீது தமிழகம் , மகாராஷ்டிரா, தெலுங்கானா , கர்நாடகா, டில்லி, கோவா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், 31 மோசடி புகார்கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article