பள்ளி மாணவிக்கு பறக்கும் முத்தம் - பாலியல் தொல்லை

சென்னை தி.நகரை சேர்ந்தவர் புஷ்பா ( பெயர் மாற்றம் ) இவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் 10 - ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு தினமும் செல்லும் போது, எதிர் வீட்டில் வசித்து வரும் பூபாலன்( வயது 33) என்பவர் சிரித்தும், பேசியும் வந்துள்ளார். மாணவியும் எதிர் வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூபாலன் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மாணவியை பார்த்து கை அசைத்துள்ளார். இதை கவனித்த மாணவியும் பதிலுக்கு கையசைத்துள்ளார். உடனே பூபாலன் மாணவிக்கு பறக்கும் முத்தம் கொடுத்து அதற்கு ரிப்ளே செய்ய கூறியுள்ளார்.

அதோடு இல்லாமல் மாணவிக்கு தொடர்ந்து பறக்கும் முத்தம் கொடுத்தப்படி, உல்லாசத்திற்கும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர் பார்க்காத மாணவி அதிர்ச்சியடைந்து கூறி அழுதார். எனவே எனது மகளை பள்ளிக்கும் செல்லும் போது பின் தொடர்ந்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வரும் பூபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

சிறுமியை உல்லாசத்திற்கு அழைத்த நபர்

புகாரின் படி மகளிர் போலீசார் பூபாலனை படித்து விசாரணை நடத்திய போது, பூபாலன் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றி வருவதும் , சென்னை ஆயுதப் படையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரை ஒரு வருடம் காதலித்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

தனது காதல் மனைவிக்கு தெரியாமல், 10 - ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை விரித்து உல்லாசத்திற்கு அழைத்ததும் உறுதியானது. அதை தொடர்ந்து பெண் காவலரின் கணவன் பூபாலன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

பல மாதங்கள் பின் தொடர்ந்து தன்னை காதலித்து திருமணம் செய்த கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெண் காவலர் மனமுடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.