சென்னை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! 41 மின்சார ரயில்கள் திடீர் ரத்து – மாற்று ஏற்பாடு என்ன?

3 months ago 7
ARTICLE AD

Tambaram to Chengalpattu Train Cancel: சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் அவசர கால தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகளானது வரும் ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. ரயில் பாதைகளின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு இந்த பணிகள் அவசியமாகிறது என்று ரயில்வே நிர்வாகம் விளக்கியுள்ளது.

41 புறநகர் மின்சார ரயில்கள் சேவை ரத்து

இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, குறிப்பிட்ட தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டிய 41 புறநகர் மின்சார ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பொதுமக்களும், பணிக்கு செல்லும் ஊழியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள் குறித்த அறிவிப்புகளையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பயணிகள் வசதிக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்

மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் திருமால்பூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம்போல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே காலை 11:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் இயக்க விவரங்கள்

மாற்று ஏற்பாடாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் ஆகிய நிலையங்களில் இருந்து காலை 9:30 மணி முதல் மதியம் 1:50 மணி வரை தாம்பரத்திற்கு தடையின்றி இயக்கப்படும். இந்த மாற்று ரயில் சேவைகளைப் பயன்படுத்தி பயணிகள் தங்களது அவசர பயணங்களை எவ்வித தொய்வும் இன்றி தடையின்றி மேற்கொள்ளலாம் என சென்னை கோட்ட ரயில்வே பயணிகள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read Entire Article