சென்னை மாநகராட்சி வேலை! 306 காலிப்பணியிடங்கள்: 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

3 months ago 4
ARTICLE AD

சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 306 காலிப்பணியிடங்களை நிரப்பறாங்க. 8 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை மாநகராட்சியில் (Chennai Corporation) செயல்படும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செவிலியர், சமூகப் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 306 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டாப் நர்ஸ் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை: 288
கல்வித் தகுதி: Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 18,000

சோஷியல் ஒர்க்கர் (Social Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: Master of Social Work (MSW) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,800

உளவியலாளர் (Psychologist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Post Graduate degree in Psychological or Clinical Psychology or Applied Psychology or Master of Philosophy in Clinical Psychology or Medical and Social Psychology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000

தடுப்பூசி மேலாளர் (Vaccine Cold Chain Manager)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E or B.Tech in Computer Science or IT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000

சீனியர் ட்ரீட்மென்ட் சூப்பர்வைசர் (Senior Treatment Supervisor)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: Bachelor degree in Science or Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19,800

நிகழ்ச்சி மற்றும் நிர்வாக உதவியாளர் (Programme Cum Administrative Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000

ஹாஸ்பிடல் பணியாளர் (Hospital Worker)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 8,500

செக்யூரிட்டி (Security Staff)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ. 8,500

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க – https://chennaicorporation.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலாளர்/ மாநகர நல அலுவலர், மாநகர நல சங்கம், பொதுசுகாதாரத் துறை, ரிப்பன் மாளிகை, சென்னை - 600003

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaicorporation.gov.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்வையிடவும்.

Read Entire Article