விழுப்புரம்: திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கமளிக்க தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு

அமைச்சர் பொன்முடியின் மேடைப் பேச்சுகளில் பல தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் சைவ- வைணவம் குறித்து அவர் ஆபாசமாகப் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதைக் குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்த்தரமான, கொச்சையான விளக்கம் ஒன்றைக் கொடுத்து இருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நெட்டிசன்கள் கடுமையாக பொன்முடி மீது விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி அமைச்சர் பொன்முடி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது இத்தகைய பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவுற்கு பிறகு பொன்முடியின் துனை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவாவிற்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி தலைமை கழகம் அறுவித்துள்ளது.

முதல்வரை சந்திக்க சென்ற அமைச்சர் பொன்முடி

தன்னிடம் இருந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கபட்டதால் அரகண்டநல்லூரில் நடைபெற்ற திருமணவிழாவில் கலந்து கொண்ட பொன்முடி அங்கிருந்து கிளம்பி விழுப்புரத்தில் உள்ள சண்முகா புரம் இல்லத்திற்கு வருகை புரிந்தார். வீட்டிற்கு வந்த பொன்முடியை பார்ப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பொன்முடியின் இல்லம் முன்பாக திரண்டனர். அதன் பின்னர் மிகுந்த மனவருத்தத்தோடு வீட்டிலிருந்த புறப்பட்ட பொன்முடி சென்னையில் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.