சென்னை ; சொத்து விற்பனை ஆசை காட்டி ரூ.30 லட்சம் மோசடி !! போலி வழக்கறிஞர் கைது

2 months ago 10
ARTICLE AD

சொத்து விற்பனை தருவதாக ஏமாற்றிய வழக்கறிஞர்

சென்னை மாதவரம் பழனியப்பா நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் அஜ்மல் ( வயது 29 ) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வருடம் மாதவரம் பகுதியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்ற போது, அங்கு வந்த முரளி மோகன் (எ) முகமது மீரான் என்பவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என அறிமுகமாகியுள்ளார்.

அஜ்மல் அவரது அப்பா பெயரில் மாதவரம் பகுதியில் உள்ள குடும்ப சொத்தை தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்து தரவேண்டும் என  முரளி  மோகன் (எ) முகமது மீரானிடம் கேட்டுள்ளார். உடனே முரளி மோகன் (எ) முகமது  மீரான் குடும்ப சொத்து பிரச்சனையை தீர்த்து விற்பனை செய்து தருவதாகவும், அதற்கு கட்டணமாக பணம் அதிகம் செலவாகும் என கூறியுள்ளார்.

பல தவணைகளாக வழங்கப்பட்ட ரூ.30 லட்சம்

இதனை நம்பிய அஜ்மல் பல தவணைகளாக ரூ.30 லட்சம் வரை முரளி மோகன் (எ) முகமது மீரானிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசிய படி சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்காமலும், பணத்தை திரும்ப தரமாலும் முரளி மோகன் (எ) முகமது மீரான் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அஜ்மல் மாதவரம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாதவரம் காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட  முரளி மோகன் (எ) முகமது மீரான் ( வயது 45 ) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ATM கார்டுகள், போலி வழக்கறிஞர் அடையாள அட்டை, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முரளி மோகன் (எ) முகமது மீரான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், வழக்கறிஞர் என ஏமாற்றி சொத்து பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி அஜ்மலிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதும், இவர் மீது ஏற்கனவே    2 குற்ற வழக்குகள் உள்ளதும்  தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட முரளி மோகன் (எ) முகமது மீரான் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Read Entire Article