சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை

1 week ago 3
ARTICLE AD

பெண்ணுக்கு ஆபாச சைகை

சென்னை துரைப்பாக்கம் எம்.சி.என். நகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் கடந்த 7 மாதங்களாக தங்கி அருகில் உள்ள ஐடி வளாகத்தில் பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாதிக்கப்பட்ட இளம்பெண் தினமும் அதிகாலையில் துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள தனியார் ஜிம் ஒன்றிக்கு உடற் பயிற்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதே போல் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தான் தங்கி இருக்கும் மகளிர் விடுதியிலிருந்து பிள்ளையார் கோயில் தெரு வழியாக ஜிம்முக்கு நடந்து செல்லும் போது இருச் சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளார். அந்த பெண் அவரை பொருட்படுத்தாமல் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் பெண் ஐடி ஊழியரின் முன்பாக சற்று தூரத்தில் நின்று கொண்டு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து விட்டு சென்றுள்ளார்.

காவலன் ஆப் - பில் புகார் தெரிவித்த பெண்

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து உடனடியாக கிளம்பியுள்ளார். அதையடுத்து காவலன் ஆப் (Kavalan App) மூலம் புகார் அளித்து விட்டு சென்றுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் துரைப்பாக்கம் ஆய்வாளர் பிரபு புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ஆய்வாளர் பிரபு தலைமையில் தனிப்படை அமைத்து ஐடி பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபரை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அடிக்கடி பாதிக்கப்பட்ட இளம்.பெண்ணிடம் இதே.போல் நடந்து கொண்டு இருப்பதாகவும், அந்த நபரின் இருசக்கர வாகனத்தையும் எண்னுடன் அடையாளம் தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை பெருங்குடி, ராஜீவ் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்த பாபு (வயது 41) என்ற நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பாபு ஓஎம்ஆர் சாலை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 15 வருடங்களாக சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் இது போன்ற ஆபாசமான வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்ட பாபு தினந்தோறும் வீட்டில் இருந்து டீ கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து ஆபாசமான விடியோவை பார்த்து ரசித்து வரும் நிலையில் பலமுறை புகார் அளித்த பெண்ணிடம் வீடியோவை காண்பித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து பாபுவின் செல்போனை போலீசார் ஆராய்ந்த போது அதிகளவு ஆபாசமான வீடியோவை வெப்சைட்டில் பார்த்து இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கைதான பாபு மீது வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read Entire Article