செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சுரேந்தர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் சுரேந்தர் மனைவியை விட்டு பிரிந்து மதுராந்தகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என தெரிகிறது

துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது

இந்தநிலையில் அவரது குடியிருப்பு பகுதியில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவலர்கள் சுரேந்தர் வீட்டை உடைத்து பார்த்த பொழுது உள்ளே அவர் தூக்கில் தொங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக பிரேதத்தை கைப்பற்றிய மதுராந்தகம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்கிலிட்டு தற்கொலை

தனிமையில் இருந்த காவலர் தற்கொலை செய்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள மதுராந்தகம் போலீசார், தொடர்ந்து இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)