சூலூர் சிறுமி கொலை வழக்கு... கைதான 2 பேருக்கு எதிராக 819 பக்க குற்றப்பத்திரிகை

4 months ago 2
ARTICLE AD

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் தேதி சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையின் போது சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் இருவரும் சம்பவத்தை நடித்துக் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன.

விசாரணை நிறைவடைந்த பின்னர் இருவரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சேகரிக்கப்பட்ட சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் சூலூர் போலீசார் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோவை போக்சோ நீதிமன்றத்தில் இ-பைலிங் முறையில் நேற்று தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகையில் 108 சாட்சிகள், 215 ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 18 நாட்களுக்குள் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article